சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தாய் இறந்த துக்கத்தில் மகளும் உயிரிழப்பு

Added : ஆக 28, 2021
Share
Advertisement
போச்சம்பள்ளி: மத்தூர் அருகே, தாய் இறந்த அடுத்த இரண்டு மணி நேரத்தில் மகள் உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்த, பொம்மேபள்ளியை சேர்ந்தவர் பவுனம்மாள், 75; இவரது கணவர் கோவிந்தசாமி கடந்த ஓராண்டுக்கு முன் இறந்து விட்டார். இவர்களுக்கு, ஆறு மகன்கள், ஆறு மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசிக்கின்றனர். இதில் மங்கம்மாள், 28, என்ற மகள் மத்தூர்

போச்சம்பள்ளி: மத்தூர் அருகே, தாய் இறந்த அடுத்த இரண்டு மணி நேரத்தில் மகள் உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்த, பொம்மேபள்ளியை சேர்ந்தவர் பவுனம்மாள், 75; இவரது கணவர் கோவிந்தசாமி கடந்த ஓராண்டுக்கு முன் இறந்து விட்டார். இவர்களுக்கு, ஆறு மகன்கள், ஆறு மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசிக்கின்றனர். இதில் மங்கம்மாள், 28, என்ற மகள் மத்தூர் அடுத்த, மாதம்பதி கிராமத்தில் முருகன் என்பருடன் திருமணம் ஆன நிலையில், பாசத்தால் தாய் பவுனம்மாளுடன் வசித்தார். நேற்று முன்தினம் மதியம், 3:00 மணியளவில் உடல்நலக்குறைவால் பவுனம்மாள் இறந்தார். துக்கம் தாங்காமல் மங்கம்மாள் தொடர்ந்து அழுதவர் சிறிது நேரத்தில் மயக்கமடைந்தார். டாக்டர் வந்து பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தார். தாய் இறந்த இரண்டு மணி நேரத்தில் மகள் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் கிராமத்தினரை சோகத்தில் ஆழ்த்தியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X