சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குழந்தை இல்லாததால் பிரச்னை; பெண் தீக்குளித்து தற்கொலை

Added : ஆக 28, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே உள்ள பெத்தனப்பள்ளியை சேர்ந்தவர் விஜயகுமார், 27; இவரது மனைவி தனலட்சுமி, 19; இவர்களுக்கு திருமணமாகி இரண்டாண்டுகள் ஆகிறது, குழந்தை இல்லை. இதனால் குடும்பத்தில் பிரச்னை இருந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன் தனலட்சுமி கணவரிடம் கோபித்து கொண்டு தன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். உடல் எடையை குறைப்பதற்காக பயிற்சி நிலையத்திற்கு சென்று

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே உள்ள பெத்தனப்பள்ளியை சேர்ந்தவர் விஜயகுமார், 27; இவரது மனைவி தனலட்சுமி, 19; இவர்களுக்கு திருமணமாகி இரண்டாண்டுகள் ஆகிறது, குழந்தை இல்லை. இதனால் குடும்பத்தில் பிரச்னை இருந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன் தனலட்சுமி கணவரிடம் கோபித்து கொண்டு தன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். உடல் எடையை குறைப்பதற்காக பயிற்சி நிலையத்திற்கு சென்று வந்துள்ளார். கடந்த சில தினங்களாக அங்கும் செல்லாததால், அவரது தாய் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த தனலட்சுமி கடந்த, 20ல் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். பலத்த தீக்காயமடைந்த அவரை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தாய் மாது, 38, புகார்படி, கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிந்தனர். கிருஷ்ணகிரி டி.எஸ்.பி., சரவணன் விசாரித்து வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X