பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தை பாதுகாப்பு, உரிமைகள்: வி.ஏ.ஓ.,க்களுக்கு பயிற்சி முகாம்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
ஓசூர்: தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், மாவட்டத்திலுள்ள, 330 கிராமங்களில், குழந்தை பாதுகாப்பு குழுக்களின் செயலாளர்களாக செயல்படும் வி.ஏ.ஓ.,க்களுக்கு, குழந்தை பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்த பயிற்சி வகுப்பு, நான்கு பிரிவாக நடந்தது. ஓசூர், சூளகிரி தாலுகாவில் பணியாற்றும் வி.ஏ.ஓ.,க்களுக்கு, ஓசூர் பி.டி.ஓ.,

ஓசூர்: தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், மாவட்டத்திலுள்ள, 330 கிராமங்களில், குழந்தை பாதுகாப்பு குழுக்களின் செயலாளர்களாக செயல்படும் வி.ஏ.ஓ.,க்களுக்கு, குழந்தை பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்த பயிற்சி வகுப்பு, நான்கு பிரிவாக நடந்தது. ஓசூர், சூளகிரி தாலுகாவில் பணியாற்றும் வி.ஏ.ஓ.,க்களுக்கு, ஓசூர் பி.டி.ஓ., அலுவலகத்திலும், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி வி.ஏ.ஓ.,க்களுக்கு, தேன்கனிக்கோட்டை தாசில்தார் அலுவலகத்திலும், நேற்று முன்தினம் பயிற்சி வகுப்பு நடந்தது. தமிழ்நாடு குழந்தை உரிமைகள் ஆணைய உறுப்பினர் ராமராஜ், பயிற்சியின் நோக்கம் குறித்து விளக்கினார். அப்போது, ஒன்றிய மற்றும் பஞ்., அளவில் கூட்டங்கள் நடத்தி, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதுடன், ஆய்வு செய்து உரிய விசாரணை பணிகளை மேற்கொள்ள வேண்டும். வி.ஏ.ஓ.,க்கள் குழந்தைகள் பாதுகாப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் சரவணன், குழந்தைகள் நல அலுவலர் அமல்ராஜ், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சுபாஷ் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X