பொது செய்தி

தமிழ்நாடு

சாலை விரிவாக்க பணிக்கு நிலம் எடுப்பு: கடிதம் வரவில்லை என குற்றச்சாட்டு

Added : ஆக 28, 2021
Share
Advertisement
நாமக்கல்: 'மோகனூர்-ராசிபுரம் சாலை விரிவாக்கத்திற்காக நிலம் எடுப்பு குறித்து தங்களுக்கு அழைப்பு கடிதம் வரவில்லை' என, தாசில்தார் அலுவலகத்தில் நில உரிமையாளர்கள் சிலர் முறையிட்டனர்.நாமக்கல் மாவட்டம், மோகனூர் முதல், ராசிபுரம் கோனேரிப்பட்டி வரை மாநில நெடுஞ்சாலை இரு வழிச்சாலையாக உள்ளதை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி நடந்து வருகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன் மோகனூர்

நாமக்கல்: 'மோகனூர்-ராசிபுரம் சாலை விரிவாக்கத்திற்காக நிலம் எடுப்பு குறித்து தங்களுக்கு அழைப்பு கடிதம் வரவில்லை' என, தாசில்தார் அலுவலகத்தில் நில உரிமையாளர்கள் சிலர் முறையிட்டனர்.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் முதல், ராசிபுரம் கோனேரிப்பட்டி வரை மாநில நெடுஞ்சாலை இரு வழிச்சாலையாக உள்ளதை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி நடந்து வருகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன் மோகனூர் முதல் முத்துக்காப்பட்டி வரை சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போது, 18 கிராமங்களை உள்ளடக்கி சாலை விரிவாக்கத்துக்காக நிலம் கையகப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாமக்கல்லில் செயல்படும் சென்னை-கன்னியாகுமரி தொழிற்தடத் திட்ட தாசில்தார் அலுவலகத்தில் நேற்று காலை, பேளுக்குறிச்சி, நரசிம்மக்காடு, கணவாய் பகுதியைச் சேர்ந்த நில உரிமையாளர்களிடம் சாலை விரிவாக்கத்துக்கு நிலத்தை வழங்கக் கோரியும், அதற்கான தொகையை அரசு தரப்பில் வழங்குவது தொடர்பாகவும் அதிகாரிகள் நேரடியாக விளக்கம் அளித்தனர். இதில், தனி மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் பங்கேற்று நில உரிமையாளர்களிடம் விளக்கம் அளித்தார். தனி தாசில்தார் மாதேஸ்வரி மற்றும் வருவாய்த் துறையினர் நிலம் எடுப்பு குறித்த விபரங்களை தெரிவித்தனர். அப்போது, 'தங்களுக்கு நிலம் எடுப்பு தொடர்பாக எவ்வித அழைப்பு கடிதமும் வரவில்லை. சாலை விரிவாக்க எல்லையில் எங்களது நிலமும் உள்ளது; அனுமதியின்றி அதனை எடுக்கக் கூடாது' என, தாசில்தார் அலுவலக வளாகத்தில் சிலர் ஆவேசமாக முறையிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X