சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வலம்புரி சங்கை விற்பதாக மோசடி; 8 பேர் கைது

Added : ஆக 28, 2021
Share
Advertisement
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், வலம்புரி சங்கை விற்பதாக கூறி மோசடியில் ஈடுபட்ட எட்டு பேரை போலீசார் கைது செய்தனர்.திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த வேப்பூர்செக்கடியை சேர்ந்தவர் பரணி, 46; இவருக்கு நேற்று முன்தினம் இரவு வந்த போன் அழைப்பில் ஒருவர், அபூர்வ வலம்புரி சங்கை விற்க முயற்சிப்பதாகவும், அதை விற்று கொடுத்தால், பல லட்சம் கமிஷனாக தருவதாகவும்,

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், வலம்புரி சங்கை விற்பதாக கூறி மோசடியில் ஈடுபட்ட எட்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த வேப்பூர்செக்கடியை சேர்ந்தவர் பரணி, 46; இவருக்கு நேற்று முன்தினம் இரவு வந்த போன் அழைப்பில் ஒருவர், அபூர்வ வலம்புரி சங்கை விற்க முயற்சிப்பதாகவும், அதை விற்று கொடுத்தால், பல லட்சம் கமிஷனாக தருவதாகவும், கிரிவலப்பாதையில் காத்திருப்பதாகவும் கூறினார். பரணி தகவலின்படி, திருவண்ணாமலை தாலுகா போலீசார் கிரிவலப்பாதையில் காத்திருந்தனர். நேற்று அதிகாலை, 1:00 மணிக்கு ஒரு கார் வந்தது. அதில் இருந்தவர்கள், பரணியை காரினுள் அழைத்து, வலம்புரி சங்கு எனக்கூறி ஒரு சாதாரண சங்கை காண்பித்தனர். அப்போது, அங்கு மறைந்திருந்த போலீசார் காரில் வந்தவர்களை பிடித்தனர். விசாரணையில் அவர்கள், திருவண்ணாமலையை சேர்ந்த கோவிந்தராஜ், 53, அஸ்வத்தாமன், 28, தீபக், 55, ராணிப்பேட்டை, சதீஷ், 21, வேட்டவலம் உமாசங்கர், 38, ஜெயங்கொண்டம் அரசு, 50, அரியாங்குப்பம் ராம்குமார், 32, தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி நாகராஜ், 41, என தெரிந்தது. அக்கும்பல் சாதாரண சங்கை வலம்புரி சங்கு எனக்கூறி, மோசடியில் ஈடுபட்டது தெரிந்து, எட்டு பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X