சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வயலில் காவலுக்கு இருந்த முதியவர் மீது துப்பாக்கி சூடு

Added : ஆக 28, 2021
Share
Advertisement
திருவண்ணாமலை: தண்டராம்பட்டு அருகே, வயலில் காவலுக்கு இருந்த முதியவர் மீது துப்பாக்கி சூடு நடந்தது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம், பேராயம்பட்டையை சேர்ந்தவர் பச்சையப்பன், 61; இவருக்கு பக்கத்து கிராமமான அத்திப்பாடியில் விவசாய நிலம் உள்ளது. இரவில் அங்கு காவலுக்கு செல்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு, வழக்கமாக காவலில் ஈடுபட்டிருந்தார்.

திருவண்ணாமலை: தண்டராம்பட்டு அருகே, வயலில் காவலுக்கு இருந்த முதியவர் மீது துப்பாக்கி சூடு நடந்தது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், பேராயம்பட்டையை சேர்ந்தவர் பச்சையப்பன், 61; இவருக்கு பக்கத்து கிராமமான அத்திப்பாடியில் விவசாய நிலம் உள்ளது. இரவில் அங்கு காவலுக்கு செல்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு, வழக்கமாக காவலில் ஈடுபட்டிருந்தார். நேற்று அதிகாலை பச்சையப்பனை அடையாளம் தெரியாதவர்கள், நாட்டு துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர். குண்டடி காயங்களுடன் அவர் அங்கிருந்து தப்பி, அரை கிலோ மீட்டர் தூரத்தில் மயங்கி விழுந்தார். அவ்வழியாக சென்றவர்கள் தகவலின்படி, உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து, வாணாபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X