பொது செய்தி

தமிழ்நாடு

'கழிப்பறை திட்டத்தில் முறைகேடு நடப்பதை மாநில அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்'

Added : ஆக 28, 2021
Share
Advertisement
திருவண்ணாமலை: ''கழிப்பறை திட்டத்தில் முறைகேடு நடப்பதை மாநில அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்,'' என, தமிழக பா.ஜ., மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறினார்.திருவண்ணாமலை அடுத்த ஜப்திகாரியந்தல் கிராமத்தில் கட்சி கொடியேற்றிய அவர், பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: பொதுத்துறை நிறுவனங்களை சுரண்டி, சுரண்டி கொள்ளையடித்து, காங்., கட்சி தன்னுடைய கட்டமைப்பை

திருவண்ணாமலை: ''கழிப்பறை திட்டத்தில் முறைகேடு நடப்பதை மாநில அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்,'' என, தமிழக பா.ஜ., மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறினார்.
திருவண்ணாமலை அடுத்த ஜப்திகாரியந்தல் கிராமத்தில் கட்சி கொடியேற்றிய அவர், பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: பொதுத்துறை நிறுவனங்களை சுரண்டி, சுரண்டி கொள்ளையடித்து, காங்., கட்சி தன்னுடைய கட்டமைப்பை வளர்த்து கொண்டிருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் மிகப்பெரிய முறைகேடுகள் நடப்பதாக சொல்லப்படுகிறது. மத்திய அரசு திட்டத்தை, மாநில அரசு செயல்படுத்துகிறது. இதன் மூலம், போலி பயனாளிகளை சேர்க்கப்படுகின்றனர். கழிப்பறை திட்டத்தில் பெரிய அளவில் முறைகேடு நடப்பதாக புகார் வந்துள்ளது. இதை மாநில அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் இதற்கு முன்பு அமைச்சராக இருந்தவர்கள், அமைச்சராக ஆனவர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டில் நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்தில் பா.ஜ., நிர்வாகி மீது புகார் வந்த உடனே சட்ட ரீதியாக நிருபிக்கும் வரை ராஜினாமா செய்துள்ளார். கட்சி சரியான நடவடிக்கை எடுத்துள்ளது. சிவசங்கர் பாபா விவகாரத்தில், பா.ஜ.,வுக்கு எந்த தொடர்பும் இல்லை என சமூக வலைதளத்தில் கூறியிருக்கிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X