பொது செய்தி

தமிழ்நாடு

ஊருக்கு செல்ல பணமின்றி தவிக்கும் நெதர்லாந்து பெண்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
வேலூர் ஊருக்கு செல்ல பணமின்றி காட்பாடியில் தவித்த நெதர்லாந்து பெண், தன்னை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.நெதர்லாந்து நாட்டை சேர்ந்தவர் ஹென்னா மேரி, 44; இவர் கடந்த, 2019ல் சமூக சேவை மேற்கொள்ள வேலூர் வந்தார். வேலூர், காட்பாடி, சத்துவாச்சாரியில் பல்வேறு சமூக பணிகள் செய்து வந்தார். கொரோனா ஊரடங்கால் காட்பாடியிலேயே தங்கினார். அவர்

வேலூர் ஊருக்கு செல்ல பணமின்றி காட்பாடியில் தவித்த நெதர்லாந்து பெண், தன்னை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.
நெதர்லாந்து நாட்டை சேர்ந்தவர் ஹென்னா மேரி, 44; இவர் கடந்த, 2019ல் சமூக சேவை மேற்கொள்ள வேலூர் வந்தார். வேலூர், காட்பாடி, சத்துவாச்சாரியில் பல்வேறு சமூக பணிகள் செய்து வந்தார். கொரோனா ஊரடங்கால் காட்பாடியிலேயே தங்கினார். அவர் கொண்டு வந்த பணம் தீர்ந்த நிலையில், விசா காலமும் முடிந்தது. சொந்த ஊர் செல்லவும், சாப்பாட்டுக்கு வழியின்றியும் தவித்த அவர், நெதர்லாந்து நாட்டிலுள்ள உறவினர்களுக்கு கடிதம் எழுதியும் பதிலில்லை. மொபைலிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையறிந்த அ.தி.மு.க., மாணவரணி மாநில துணை செயலாளர் பாபு, அப்பெண்ணை வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று அழைத்து வந்தார். தன்னை நெதர்லாந்து நாட்டிற்கு அனுப்பி வைக்கும்படி அதிகாரிகளிடம் அப்பெண் மனு கொடுத்தார். இது குறித்து கலெக்டர் அலுவலக அதிகாரிகளை கேட்டதற்கு, டில்லியில் இந்தியாவிற்கான நெதர்லாந்து நாட்டு அதிகாரிகள் மூலம், அவரை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X