கடல் பாசியால் வலைகள் சேதம்: மீனவர்களுக்கு நஷ்டம்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே கடல் நுண்ணுயிர் பாசிகளால் (கொட்றாசி) கூண்டு வலைகள் சேதம்அடைந்து, மீனவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது.இலங்கை கடற்படை கெடுபிடியால் வாழ்வாதாரம் பாதித்த ராமேஸ்வரம் மீனவர்களுக்கு மாற்று தொழிலாக கூண்டு வலையில் மீன் வளர்ப்பு திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.ராமேஸ்வரம் கடலோரத்தில் 100க்கும் மேலான கூண்டு வலையில் மீனவர்கள் கடல் விரால் மீனை

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே கடல் நுண்ணுயிர் பாசிகளால் (கொட்றாசி) கூண்டு வலைகள் சேதம்அடைந்து, மீனவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது.இலங்கை கடற்படை கெடுபிடியால் வாழ்வாதாரம் பாதித்த ராமேஸ்வரம் மீனவர்களுக்கு மாற்று தொழிலாக கூண்டு வலையில் மீன் வளர்ப்பு திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.ராமேஸ்வரம் கடலோரத்தில் 100க்கும் மேலான கூண்டு வலையில் மீனவர்கள் கடல் விரால் மீனை வளர்க்கின்றனர்.தங்கச்சிமடம் நாலுபனை கடற்கரையில் உள்ள கூண்டு வலையில் கடல் நுண்ணுயிர் பாசிகள் அதிகமாக வளர்ந்ததால், பாரம் தாங்காமல் கூண்டு வலை கடலுக்குள் இறங்கியதும் ஏராளமான மீன்கள் வலையில் இருந்து வெளியேறியது.இதனால் பாசி படிந்த வலையை அகற்றி புதிய வலை பொருத்திட ரூ. 50 ஆயிரம் செலவு ஆனதால். மீனவர்களுக்கு இழப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X