பொது செய்தி

இந்தியா

கொரோனா தொற்று ஏற்பட்டோருக்கு தடுப்பூசி.. ஒரு ' டோஸ்' போதும்!: சென்னையில் நடந்த ஆய்வில் ஐ.சி.எம்.ஆர்., தகவல்

Updated : ஆக 30, 2021 | Added : ஆக 28, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி:'கொரோனா தொற்று ஏற்பட்டோருக்கு 'கோவாக்சின்' தடுப்பூசி ஒரு 'டோஸ்' செலுத்தினாலே தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது' என, ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது. சென்னையில் இதற்கான ஆய்வு நடத்தப்பட்டது.கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி வழங்கும் பணி தீவிரமாக நடக்கிறது.'சீரம்' நிறுவனத்தின் 'கோவிஷீல்டு'
 கொரோனா தொற்று, தடுப்பூசி,ஒரு ' டோஸ்'  போதும்!, ஆய்வு, ஐ.சி.எம்.ஆர்., தகவல்

புதுடில்லி:'கொரோனா தொற்று ஏற்பட்டோருக்கு 'கோவாக்சின்' தடுப்பூசி ஒரு 'டோஸ்' செலுத்தினாலே தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது' என, ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது.
சென்னையில் இதற்கான ஆய்வு நடத்தப்பட்டது.கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி வழங்கும் பணி தீவிரமாக நடக்கிறது.'சீரம்' நிறுவனத்தின் 'கோவிஷீல்டு' மற்றும் தெலுங்கானா மாநிலம் ஐதராபாதைச் சேர்ந்த 'பாரத் பயோடெக்' நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகள் நம் நாட்டில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.


ஆராய்ச்சி இதழ்

இதைத் தவிர, ரஷ்யாவின் 'ஸ்புட்னிக் - வி' அமெரிக்காவின் மாடர்னா மற்றும் ஜான்சன் அண்டு ஜான்சன் தயாரிக்கும் தடுப்பூசிகளை பயன்படுத்தவும் அவசர கால அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.நாடு முழுதும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தலா இரண்டு டோஸ் தடுப்பூசி வழங்கப்படுகிறது.இந்நிலையில், கொரோனா தொற்று ஏற்பட்டோருக்கு எத்தனை டோஸ் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து ஆராய்ச்சி நடந்து வருகிறது.இது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வு முடிவுகள், இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டுள்ளன.


நோய் எதிர்ப்பு சக்தி

அதில் கூறப்பட்டுள்ளதாவது:கொரோனாவால் பாதிக்கப்பட்டு, கிசிச்சை பெற்று குணம் அடைந்தவர்களுக்கு எத்தனை டோஸ் தடுப்பூசி வழங்குவது என்பது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.கொரோனாவால் பாதிக்கப்பட்ட டாக்டர்கள் உட்பட முன்கள பணி யாளர்களிடம் சென்னையில் மே மாதத்தில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 114 பேர் பங்கேற்றனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒரு டோஸ் கோவாக்சின் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களிடம் ஆய்வு செய்யப்பட்டது. அவர்களுக்கு, கொரோனா வால் பாதிக்கப்படாமல் இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டோருக்கு கிடைக்கும் அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துள்ளது தெரிய வந்துள்ளது.

இந்த முதற்கட்டப் பரிசோதனைகளை அதிகமானோருக்கு செய்ய வேண்டும். அதில் இந்த முடிவுகள் உறுதி செய்யப்பட வேண்டும். அவ்வாறு உறுதி செய்யப்பட்டால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு ஒரு டோஸ் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தினாலே போதுமானது. அவர்களுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


நல்ல மாற்றம்!

நாடு முழுதும் நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில், ஒரு கோடி 'டோஸ்' தடுப்பூசி வழங்கப் பட்டுள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்து உள்ளனர். இது குறித்து, டில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லுாரியின் மருந்துகள் பிரிவின் தலைவர் டாக்டர் நவீத் விக் கூறியுள்ளதாவது:

ஒரே நாளில் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி என்பது நிச்சயம் மிகப் பெரிய மைல்கல். இந்த வேகம், ஆர்வம் தொடர வேண்டும். நாட்டின் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி கிடைக்கும் வரை கொரோனாவில் இருந்து நமக்கு விடுதலை கிடைக்காது.இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதற்கிடையே நேற்று வரை, 63 கோடி 'டோஸ்' தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raghavan - Srirangam, Trichy,இந்தியா
29-ஆக-202111:59:59 IST Report Abuse
raghavan அறிகுறி இல்லாமல் கொரானா வந்திருந்தால் எப்படி தெரியும். இதை கண்டுபிடித்தால் தடுப்பூசிகள் மிச்சமாகும்.
Rate this:
Cancel
venkatan - Puducherry,இந்தியா
29-ஆக-202108:30:32 IST Report Abuse
venkatan நல்ல முன்னேற்றம். அப்படியே ஆக கடவுள் அருளட்டும். நலப் பணியாளர்களின் முயற்சிக்கு தூண்டுகோல்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X