ஆப்கனில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியவன் குண்டு வீசி கொலை!

Updated : ஆக 29, 2021 | Added : ஆக 28, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
வாஷிங்டன்:ஆப்கனில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட பயங்கரவாதியை, அமெரிக்க ராணுவம், 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா குட்டி விமானம் வாயிலாக குண்டு வீசிக் கொலை செய்து, தன் சபதத்தை நிறைவேற்றியுள்ளது.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான், தற்போது தலிபான் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. இதனால், ஆப்கன் மக்களும், அங்கு வசித்த வெளிநாட்டினரும்
ஆப்கன்,வெடிகுண்டு,தாக்குதல்,நடத்தியவன்,குண்டு வீசி கொலை!

வாஷிங்டன்:ஆப்கனில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட பயங்கரவாதியை, அமெரிக்க ராணுவம், 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா குட்டி விமானம் வாயிலாக குண்டு வீசிக் கொலை செய்து, தன் சபதத்தை நிறைவேற்றியுள்ளது.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான், தற்போது தலிபான் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. இதனால், ஆப்கன் மக்களும், அங்கு வசித்த வெளிநாட்டினரும் பீதி அடைந்துள்ளனர். ஆப்கனிலிருந்து எப்படியாவது வெளியேற வேண்டும் என்ற நோக்கத்தில், காபூலில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் குவிந்துள்ளனர்.

விமான நிலையத்திற்கு உள்ளும், வெளியிலும் ஆயிரக்கணக்கானோர் குவிந்து உள்ளதால் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், 26ம் தேதி இரவு காபூல் விமான நிலையத்திற்கு அருகில், ஐ.எஸ்.ஐ.எஸ்., - கே பயங்கரவாத அமைப்பினர் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் அமெரிக்க ராணுவத்தினர் 13 பேர் உட்பட 182 பேர் உயிரிழந்தனர்.


கடும் கண்டனம்

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், 'அமெரிக்காவுக்கு தீங்கிழைக்க நினைக்கும் யாரையும் மன்னிக்க மாட்டோம். அவர்களை வேட்டையாடி சரியான பதிலடி கொடுப்போம்; பழிவாங்குவோம்' என, நேற்று முன்தினம் ஆவேசமாக பேசினார். அதன்படி, நேற்று அமெரிக்க ராணுவம் ஆளில்லா குட்டி விமானம் வாயிலாக, ஆப்கனில் தாக்குதலை துவங்கியது.

மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ்., - கே பயங்கரவாதியை, குண்டு வீசிக் கொன்று சபதத்தை நிறைவேற்றியது. இது குறித்து அமெரிக்க ராணுவ செய்தி தொடர்பாளர், கேப்டன் பில் அர்பன் கூறியதாவது:காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட பயங்கரவாதி, ஆப்கனில் உள்ள நங்கர்ஹர் மாகாணத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ஆளில்லா குட்டி விமானம் வாயிலாக நடத்தப்பட்ட குண்டு வீச்சில் அந்த பயங்கரவாதி உயிரிழந்தான். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனை, அமெரிக்க தேசிய பாதுகாப்பு குழு அதிகாரிகள் சந்தித்து பேசினர்.


அதிகபட்ச பாதுகாப்பு

இது குறித்து வெள்ளை மாளிகை செய்தித் துறை செயலர் ஜென் பிசக்கி கூறியதாவது:ஆப்கனை விட்டு அமெரிக்க ராணுவம், நாளை மறுதினம் வெளியேற உள்ளது. அதற்குள் மேலும் பல தாக்குதல்களை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு குழுவினர், ஜோ பைடனிடம் தெரிவித்தனர். இதையடுத்து, காபூல் விமான நிலையத்தில் அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த இரு வாரங்களில் ஆப்கனில் இருந்து ஒரு லட்சத்திற்கும் அதிக மானோர் விமானங்களில் அழைத்து வரப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள அமெரிக்கர்களும் விரைவில் அழைத்து வரப்படுவர்.மீட்பு நடவடிக்கையில் அடுத்த சில நாட்கள் மிக முக்கியமானதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


கட்டுப்பாடுகள்

ஆப்கனில் மீண்டும் தாக்குதல் நடத்த, பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ்., - கே திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து, காபூல் விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வெளியே காத்திருந்த கூட்டத்தினர் அப்புறப்படுத்தப்பட்டு, 1,600 அடி தள்ளி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை சுற்றிலும் அரண் போல ஏராளமான தலிபான்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். தலிபான்களின் சோதனைச் சாவடிகளிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நேற்றைய நிலவரப்படி விமான நிலையத்தில் 5,400 பேர் காத்திருக்கின்றனர்.


கேரளாவைச் சேர்ந்த 14 பேர்

கேரள மாநிலத்தின் மலப்புரம், காசர்கோடு, கண்ணுார் மாவட்டங்களில் இருந்து பலர் 2014ல் ஆப்கானிஸ்தான் சென்றனர். அவர்கள் பயங்கரவாத அமைப்பில் இணைந்தனர். அவர்களில் சிலர் ஆப்கன் அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதும், பக்ராம் சிறையில் இருந்த பயங்கரவாதிகளை விடுதலை செய்தனர். இவர்களில் கேரளாவில் இருந்து சென்ற 14 பேரும் அடங்குவர். இவர்கள், ஆப்கனின் நங்கர்ஹர் மாகாணத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ்., - கே பயங்கரவாத அமைப்பில் இணைந்து செயல்படுவது தெரியவந்துள்ளது. இதில், ஒருவர் மட்டும் கேரளாவில் உள்ள தன் குடும்பத்தினருடன் போனில் பேசியுள்ள தகவலும் வெளியாகி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-ஆக-202118:34:30 IST Report Abuse
பேசும் தமிழன் அந்த 14 பேரையும் அங்கேயே போட்டு தள்ளுங்கள்.... இதையும் அமெரிக்கா செய்து முடித்தால் உங்களுக்கு புண்ணியமா போகும்... இதை இந்தியா துல்லிய தாக்குதலை நடத்தினால்... பப்பு மற்றும் கம்பிகள்..... ஆதாரம் எங்கே என்று கேட்பார்கள்.... குறைந்த பட்சம் இறந்தவனையாவது வந்து சொல்ல சொல்லுங்கள்.... அப்போது தான் நம்புவோம் என்று இங்குள்ள அறிவு கோளுந்துகள் கூறுவார்கள்
Rate this:
Cancel
திரு.திருராம் - திரு.திருபுரம்,இந்தியா
29-ஆக-202115:51:09 IST Report Abuse
திரு.திருராம் இது மானப்பிரச்சனை ஆயிப்போச்சி, எவனையோ போட்டுத்தள்ளிட்டு மூளை முட்டின்னுட்டு மாஸ் காட்டாப்புல
Rate this:
Cancel
g.kumaresan - Chennai,இந்தியா
29-ஆக-202113:20:35 IST Report Abuse
g.kumaresan லட்ச கணக்கான மக்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதை விட எழுபதாயிரம் தீவிரவாதிகளை வெளியேற்றியிருக்கலாம் அமெரிக்கா.
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
29-ஆக-202113:42:00 IST Report Abuse
தமிழவேல் குவாத்தனமோ ஜெயில் தான் சரியா வேலை செய்யலியே.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X