பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 3,417 மரபணு சோதனையில் 80% பேர் டெல்டா வகை கோவிட் வைரஸால் பாதிப்பு

Updated : ஆக 29, 2021 | Added : ஆக 28, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் நடத்தப்பட்ட 3,417 மரபணு சோதனையில் 80% பேர் டெல்டா வகை கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் மாணவர்களுக்கான தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. அதன் தொடக்க விழாவில் பங்கேற்ற சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் பின்னர் கூறியதாவது, 3,417 மாதிரிகள் டிசம்பர் மாதம் முதல்

சென்னை: தமிழகத்தில் நடத்தப்பட்ட 3,417 மரபணு சோதனையில் 80% பேர் டெல்டா வகை கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.



latest tamil news




சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் மாணவர்களுக்கான தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. அதன் தொடக்க விழாவில் பங்கேற்ற சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் பின்னர் கூறியதாவது,

3,417 மாதிரிகள் டிசம்பர் மாதம் முதல் இதுவரை மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டன. 2,633 மாதிரிகளின் முடிவுகள் வந்துள்ளன. இதில் 2,150 மாதிரிகளில் 80 சதவீதம் டெல்டா வகை கோவிட் வைரஸ் ஆகும். 2,150ல் 12 மாதிரிகள் டெல்டா பிளஸ் கோவிட் வைரஸ் ஆகும்.


latest tamil news



இறுதியாக அனுப்பிய 222 மாதிரிகள் அனைத்துமே டெல்டா வகையை சேர்ந்ததுதான். அண்மையில் கண்டறியப்பட்ட அனைத்து கிளஸ்டர்களிலும் கண்டறியப்பட்டதும் டெல்டா வகை கொரோனா. பொதுமக்கள் இதனால் பதட்டப்பட வேண்டாம். டெல்டா வகை கொரோனாவுக்கான சிகிச்சை முறையைதான் தமிழகம் வழங்கி வருகிறது. இவ்வாறு கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-ஆக-202110:58:31 IST Report Abuse
அருணா டெல்டா வைரஸ் என்றால் எச்சரிக்கை யாக இருக்க வேண்டும். உண்மையே.கோயிலுக்கு மட்டும் தடை விதித்து அரசு பாதுகாக்கும்.
Rate this:
Cancel
murugesan k - coimbatore,இந்தியா
29-ஆக-202110:40:08 IST Report Abuse
murugesan k தலைப்பை தரமாகத்தான் போடுங்கள்
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
29-ஆக-202104:39:42 IST Report Abuse
Mani . V ஆனா, நமக்கு அதைப்பற்றி எல்லாம் கவலையில்லை. 59 கோடியில் சமாதி ஸாரி நினைவிடம் கட்டுவதுதான் முக்கியம், முக்கியம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X