தமிழ்நாடு

13 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
ராமநாதபுரம், ஆக.29- மாவட்டத்தில் 1981 பள்ளி ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். இவர்கள் வசதிக்காக சுகாதாரத்துறை மூலம் 13 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடக்கிறது. முதல் நாளில் 270 பேர் மட்டுமே வந்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் 137 அரசு, 49 அரசு நிதிஉதவிபெறும் பள்ளிகள், 78 சுயநிதி பள்ளிகள் என மொத்தம் 264 பள்ளிகள் உள்ளன. இங்கு ஒன்பது முதல்

ராமநாதபுரம், ஆக.29- மாவட்டத்தில் 1981 பள்ளி ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். இவர்கள் வசதிக்காக சுகாதாரத்துறை மூலம் 13 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடக்கிறது. முதல் நாளில் 270 பேர் மட்டுமே வந்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் 137 அரசு, 49 அரசு நிதிஉதவிபெறும் பள்ளிகள், 78 சுயநிதி பள்ளிகள் என மொத்தம் 264 பள்ளிகள் உள்ளன. இங்கு ஒன்பது முதல் பிளஸ் 2 வகுப்புகளில் 31,952 மாணவர்கள் படிக்கின்றனர். ஆசிரியர்கள், அலுவலர்என 5745 பேர் பணிபுரிகின்றனர். இவர்களில் 3764 நபர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். மீதியுள்ள 1981 பேருக்கு பள்ளி திறப்பிற்கு முன்பாக தடுப்பூசி செலுத்த 11 இடங்களில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் சுகாதாரத்துறை மூலம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு முகாம் நடக்கிறது. முதல் நாளான நேற்று ஒரு சில ஆசிரியர்கள் தான் தடுப்பூசி செலுத்த வந்தனர். அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அழைக்கப்பட்டு, நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்தினர். பொது மக்கள் பட்டியலில் ஆசிரியர்கள் இடம் பெறுகின்றனர். தனியாக பதிவு செய்வது இல்லை, இதனால் ஒருநாளைக்கு எத்தனை ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்துகின்றனர் என தனியாக கணக்கெடுக்க முடியவில்லை. தடுப்பூசி செலுத்திய சான்று உடன் அனுப்ப ஏற்பாடு செய்துஉள்ளோம், காலதாமதம் செய்யாமல் ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்த முன்வர வேண்டும் என சுகாதாரத்துறையினர் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X