2008க்கு பின் கடல் வழி தாக்குதல் இல்லை: ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்

Updated : ஆக 30, 2021 | Added : ஆக 28, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:இந்திய கடலோர பாதுகாப்பு படைக்காக கட்டப்பட்ட ஏழாவது ஆழ்கடல் ரோந்துக் கப்பலான 'ஐ.சி.ஜி. விக்ரஹா' நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.ராணுவ அமைச்சகத்திற்கும் சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள 'எல் அண்ட் டி' கப்பல் கட்டும் நிறுவனத்திற்கும் இடையே 2015ல் ஏழு ஆழ்கடல் ரோந்துக் கப்பல் கட்டுவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதுவரை ஆறு கப்பல்கள் கட்டி
2008க்கு பின்,கடல் வழி தாக்குதல்,இல்லை,ராஜ்நாத் சிங், பெருமிதம்

சென்னை:இந்திய கடலோர பாதுகாப்பு படைக்காக கட்டப்பட்ட ஏழாவது ஆழ்கடல் ரோந்துக் கப்பலான 'ஐ.சி.ஜி. விக்ரஹா' நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

ராணுவ அமைச்சகத்திற்கும் சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள 'எல் அண்ட் டி'
கப்பல் கட்டும் நிறுவனத்திற்கும் இடையே 2015ல் ஏழு ஆழ்கடல் ரோந்துக் கப்பல்
கட்டுவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதுவரை ஆறு கப்பல்கள் கட்டி
ஒப்படைக்கப்பட்டு உள்ளன.தற்போது ஏழாவது கப்பலான 'விக்ரஹா' தன் சேவையை துவங்க வசதியாக நாட்டுக்காகஅர்ப்பணிக்கும் விழா சென்னை துறைமுகத்தில் நடந்தது. ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் விக்ரஹா கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்து பேசியதாவது:

இந்திய பாதுகாப்பு துறை வரலாற்றில் ஒரு தனியார் நிறுவனத்துக்கு முதன் முறையாக ஏழு
கப்பல்கள் தயாரிக்கும் ஒப்பந்தம் வழங்கப்பட்டது. முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் இந்த கப்பல் தயாரிக்கப்பட்டு உள்ளது.இந்திய கடலோர காவல் படையில் தற்போது
20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களும் 150 ரோந்துக் கப்பல்களும் 65 விமானங்களும் உள்ளன. இந்திய கடலோர காவல்படை உருவாக்கப்பட்ட 40 ஆண்டுகளில் சர்வதேச தரத்துடன்
செயல்பட்டு கடல் பாதுகாப்பு பேராபத்துக்களை தடுப்பதில் திறமையுடன் செயல்பட்டு
வருகிறது.

கடலோர காவல் படை தன் பலத்தையும் திறமையையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் 2008ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்குப் பின் கடல் வழியாக வந்து பயங்கரவாதிகள் எந்த
தாக்குதலையும் நம்நாட்டில் நடத்தவில்லை.கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் பொருட்களை கடலோர காவல்படைமீட்டுள்ளது.

சர்வதேச பாதுகாப்பு எல்லை பிரச்னை மற்றும் கடல்வழி ஆதிக்கம் போன்றவை காரணமாக உலக நாடுகள் அனைத்தும் அவர்களது ராணுவ பலத்தை நவீனமயமாக்கலுடன் அதிகரித்து வருகின்றன. இதனால் ராணுவ தளவாடங்களுக்கான தேவை தொடர்ந்து அதிரித்து வருகிறது. இதன் காரணமாக அடுத்து ஓரிரு ஆண்டுகளில் பாதுகாப்பு செலவுகள் சர்வதேச அளவில் 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அதிகரிக்க உள்ளன.

'எல் அண்ட் டி'யுடன் விக்ரமில் துவங்கிய பயணம் விஜய் வீர் வராஹா வரத் வஜ்ரா என்று வந்து இறுதியாக விக்ரஹாவில் முடிந்துள்ளது. இந்திய கடலோர காவல்படையின் தனித்துவமான திறமையால் அனைத்து சவால்களையும் எதிர்காலத்தில் சமாளிக்க முடியும் என்று
நம்புகிறேன்.இவ்வாறு அவர்பேசினார்.

இந்நிகழ்ச்சியில் இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நரவாணே, இந்திய கடலோர காவல்படையின் தலைமை இயக்குனர் கே.நடராஜன், கிழக்கு பிராந்திய ஐ.ஜி. ஆனந்த் படோலா, தமிழக
தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, எல் அண்ட் டி கப்பல் கட்டுமான நிறுவன
இயக்குனர் ஜேடி பாட்டில் உட்பட பலர் பங்கேற்றனர்.




கப்பலில் என்ன சிறப்பு



* விக்ரஹா ரோந்து கப்பல் 98 மீட்டர் நீளமும் 15 மீட்டர் அகலமும் உடையது. கப்பலின் மொத்த எடை 2100 டன். 5000 கடல் மைல் தொலைவுக்கு செல்லும் திறன் உடையது. இரட்டை டீசல்
இன்ஜின்களால் இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கப்பல் அதிகபட்சம் 26 கடல் மைல் வேகத்தில் செல்லும்

* 12.7 மி.மீ. ரக துப்பாக்கிகள், இரட்டை இன்ஜின் பொருத்தப்பட்ட ஹெலிகாப்டர் தரையிறங்கும் வசதியும் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஹெலிகாப்டர் ரோந்துக் கப்பலின் செயல்பாட்டுத்திறன் கண்காணிப்பு தேடுதல், மீட்புத்திறனை அதிகரிக்கும்

* நவீன தொலை தொடர்பு சாதனங்கள் வழிகாட்டும் கருவிகள் எண்ணெய் கசிவு போன்ற
சுற்றுச்சூழல் மாசுகளை தடுக்கும் கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. கமான்டண்ட் அனுாப் தலைமையில் இயங்கும் இந்த ரோந்து கப்பலில் 11 அதிகாரிகளும் 110 சிப்பந்திகளும் பணிபுரிவர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
29-ஆக-202115:54:49 IST Report Abuse
Pugazh V பாவம் பாஜக ஆதரவு வாசகர்கள். இவர் பாட்டுக்கு பாதுகாப்பு துறையின் தகவலை அப்படியே சொல்லி விட்டார். 2008 லிருந்து 2014 வரை காங்கிரஸ் ஆட்சி தான். எனவே பாஜக எந்த கருத்தும் போடலை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X