வரத்துக்கால்வாயில் சமரணை கட்ட முடிவு நீண்ட கால பிரச்னைக்கு அதிகாரிகள் தீர்வு

Added : ஆக 28, 2021
Share
Advertisement
மானாமதுரை :மானாமதுரை தீத்தான்பேட்டை அருகில் வைகை வரத்து கால்வாயில் சமரணை கட்டி நீரை பங்கிட்டு கொள்வதில் இரு கிராமத்தினரிடையே நீண்ட காலமாக இருந்த பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டது.நேற்று ரூ.20 லட்சம் செலவில் சமரணை கட்ட பூமி பூஜை நடைபெற்றது.தீத்தான்பேட்டை அருகே வைகை ஆற்றில் இருந்து வரத்து கால்வாயில் வரும் நீரை பங்கிட்டு கொள்வதில் கிளங்காட்டூர்,அன்னவாசல்

மானாமதுரை :மானாமதுரை தீத்தான்பேட்டை அருகில் வைகை வரத்து கால்வாயில் சமரணை கட்டி நீரை பங்கிட்டு கொள்வதில் இரு கிராமத்தினரிடையே நீண்ட காலமாக இருந்த பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டது.நேற்று ரூ.20 லட்சம் செலவில் சமரணை கட்ட பூமி பூஜை நடைபெற்றது.தீத்தான்பேட்டை அருகே வைகை ஆற்றில் இருந்து வரத்து கால்வாயில் வரும் நீரை பங்கிட்டு கொள்வதில் கிளங்காட்டூர்,அன்னவாசல் கிராமத்தினரிடையே பிரச்னை இருந்து வந்தது. கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில், எம்.எல்.ஏ., தமிழரசி, கலெக்டர் மதுசூதன்ரெட்டி, டி.ஆர்.,ஓ., மணிவண்ணன், ஆர்.டி.ஓ., முத்துகழுவன் மற்றும் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வெங்கடகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் இப்பிரச்னையை முடிவிற்கு கொண்டு வர வலியுறுத்தியதை தொடர்ந்து மாவட்ட வருவாய் அதிகாரி மணிவண்ணன் தலைமையில் இருகிராமத்தினரிடையே நடந்த சமாதான கூட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டது.தீத்தான்பேட்டை அருகே கால்வாயில் ரூ.20 லட்சம் செலவில் சமரணை கட்ட ஒப்புக்கொண்டதை அடுத்து மானாமதுரை தாசில்தார் தமிழரசன், உதவி பொறியாளர் செந்தில்குமார் தலைமையில் பூமிபூஜை நடந்தது.கிளங்காட்டூர் நீர்ப்பாசன சங்க தலைவர் துபாய்காந்தி,நிர்வாகி சடையப்பன்,அன்னவாசல் கிராம கண்மாய் சங்க நிர்வாகி சரவணன், நிர்வாகி காந்தி ஜெயலெட்சுமி உட்பட இரு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X