சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கூடுதல் கமிஷனரின் கார் ஓட்டுனர் பலி

Added : ஆக 28, 2021
Share
Advertisement
குமரன் நகர் : தி.நகர் அருகே நடந்த விபத்தில், போக்குவரத்து கூடுதல் கமிஷனரின் கார் ஓட்டுனர் பலியானது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.விருகம்பாக்கம், சின்மயா நகர், ஆணி தெருவைச் சேர்ந்தவர் மனோஜ் குமார், 27. ராயலா நகர் காவல் நிலைய காவலரான மனோஜ் குமார், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் பிரதீப்குமார் என்பவரின், கார் ஓட்டுனராக பணி புரிந்து வந்தார்.இவர், நேற்று முன்தினம் இரவு
 கூடுதல் கமிஷனரின் கார் ஓட்டுனர் பலி

குமரன் நகர் : தி.நகர் அருகே நடந்த விபத்தில், போக்குவரத்து கூடுதல் கமிஷனரின் கார் ஓட்டுனர் பலியானது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

விருகம்பாக்கம், சின்மயா நகர், ஆணி தெருவைச் சேர்ந்தவர் மனோஜ் குமார், 27. ராயலா நகர் காவல் நிலைய காவலரான மனோஜ் குமார், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் பிரதீப்குமார் என்பவரின், கார் ஓட்டுனராக பணி புரிந்து வந்தார்.இவர், நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து, தன் இரு சக்கர வாகனத்தில், சாதாரண உடையில் வீடு திரும்பினார். மேற்கு மாம்பலம், கோவிந்தன் சாலை இந்தியன் ஆயில் பெட்ரோல் 'பங்க்' அருகே திரும்பியபோது, இரு சக்கர வாகனத்துடன் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

அப்போது, பின்னால் வேகமாக வந்த சொகுசு கார், மனோஜ்குமார் மீது மோதியதில் தலையில் பலத்த காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.மருத்துவ பரிசோதனையில் அவர் இறந்தது தெரியவந்தது.தகவல் அறிந்து வந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார், விபத்துக்கு காரணமான மேற்கு மாம்பலம், போஸ்டல் காலனியைச் சேர்ந்த கார் ஓட்டுனர் திருஞானசம்பந்தர், 47, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X