பொது செய்தி

தமிழ்நாடு

சொத்து வரி செலுத்தாத கடைகள் மூடல் மாநகராட்சி வருவாய் துறை அதிரடி

Added : ஆக 28, 2021
Share
Advertisement
சென்னை : சென்னை, தி.நகரில் சொத்து வரிசெலுத்தாத கடைகள், மாநகராட்சி வருவாய் துறையினரால் மூடப்பட்டன. கோடம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட தி.நகர் பகுதியில் பல ஆண்டுகளாக மாநகராட்சிக்கு சொத்து வரி கட்டாமல் உள்ள கடைகள் குறித்து, மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகள் கணக்கெடுத்தனர். இதில், மேற்கு மாம்பலம்ஆரிய கவுடா சாலை, தி.நகர் நடேசன் சாலை மற்றும் தெற்கு உஸ்மான் சாலையில் உள்ள
சொத்து வரி செலுத்தாத கடைகள் மூடல் மாநகராட்சி வருவாய் துறை அதிரடி

சென்னை : சென்னை, தி.நகரில் சொத்து வரிசெலுத்தாத கடைகள், மாநகராட்சி வருவாய் துறையினரால் மூடப்பட்டன.

கோடம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட தி.நகர் பகுதியில் பல ஆண்டுகளாக மாநகராட்சிக்கு சொத்து வரி கட்டாமல் உள்ள கடைகள் குறித்து, மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகள் கணக்கெடுத்தனர். இதில், மேற்கு மாம்பலம்ஆரிய கவுடா சாலை, தி.நகர் நடேசன் சாலை மற்றும் தெற்கு உஸ்மான் சாலையில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ., - டி.என்.யூ., நாகராஜன் என்பவருக்கு சொந்தமான கடைகளில், மூன்று ஆண்டுகளாக 26 லட்சம் ரூபாய் சொத்து வரி செலுத்தாதது தெரியவந்தது.

இதையடுத்து, உதவி வருவாய் அலுவலர் தலைமையில், மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.இதில், மேற்கு மாம்பலம் ஆரிய கவுடா சாலையில் உள்ள, ஏழு கடைகளில் வாடகைக்கு இருப்போர், 5 லட்சம் ரூபாய் செலுத்தினர். நடேசன் சாலை மற்றும்தெற்கு உஸ்மான் சாலையில் உள்ள சொத்து வரி செலுத்தாத கடைகள் மூடப்பட்டன.

அதேபோல், முன்னாள் எம்.எல்.ஏ., - வி.பி.ஆர்., ரமேஷ் மற்றும் அவரது மனைவி மல்லிகா பெயரில் உள்ள சொத்துக்களுக்கு, 11 லட்சம் ரூபாய் சொத்து வரி செலுத்தப்படாமல் உள்ளது.தி.நகர், தெற்கு உஸ்மான் சாலையில் உள்ள வி.கே.ஆர்., ஓட்டல், 8 லட்சம் ரூபாய் சொத்து வரி பாக்கி வைத்துள்ளது. இவர்களை, மாநகராட்சி வருவாய் துறைஅதிகாரிகள், சொத்துவரியை உடனடியாக செலுத்தும்படி எச்சரித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X