தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில் தேசிய கண் தான விழிப்புணர்வு துவக்கம்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
சென்னை : சென்னை, ஓமந்துாரார் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, சென்னை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், சென்னை மாநகராட்சி இணைந்து, தேசிய கண்ணொளி திட்டத்தின் கீழ், கண் தான விழிப்புணர்வு குறித்த இரு வார விழா துவக்கியுள்ளது.இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, கண் தானம் பற்றிய முக்கியத்துவம் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்த சிறப்பு கருத்தரங்கம் நேற்று நடந்தது.இது
 அரசு மருத்துவமனையில் தேசிய கண் தான விழிப்புணர்வு துவக்கம்

சென்னை : சென்னை, ஓமந்துாரார் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, சென்னை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், சென்னை மாநகராட்சி இணைந்து, தேசிய கண்ணொளி திட்டத்தின் கீழ், கண் தான விழிப்புணர்வு குறித்த இரு வார விழா துவக்கியுள்ளது.

இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, கண் தானம் பற்றிய முக்கியத்துவம் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்த சிறப்பு கருத்தரங்கம் நேற்று நடந்தது.இது குறித்து, மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி கூறியதாவது:எந்த வயதிலும், கண் தானம் செய்ய முன்வரலாம் என்பதற்கு எடுத்துக்கட்டாக, 80 வயதை கடந்த ஓய்வு பெற்ற இரண்டு பேராசிரியர்கள், கண் தானம் செய்ய முன்வந்து, படிவங்களை பூர்த்தி செய்து கொடுத்துள்ளனர்.

இந்த கருத்தரங்கில், மருத்துவ மாணவர்களிடையே, கண் தான விழிப்புணர்வு குறித்து கவிதை போட்டி, கட்டுரை போட்டி, பாட்டு போட்டி ஆகியவை நடத்தப்பட்டன. அதில், வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X