சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவில் பணம் கையாடல் பெண் அதிகாரி 'சஸ்பெண்ட்'

Added : ஆக 28, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் : பணம் கையாடல் தொடர்பாக, வல்லக்கோட்டை முருகன் கோவிலில் பணியாற்றிய பெண் செயல் அலுவலர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.காஞ்சிபுரம், வல்லக்கோட்டையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில், முதல் நிலை செயல் அலுவலராக சிந்துமதி, 48, என்பவர் பணியாற்றினார். இவர், கோவில் பணத்தை கையாடல் செய்ததாக

காஞ்சிபுரம் : பணம் கையாடல் தொடர்பாக, வல்லக்கோட்டை முருகன் கோவிலில் பணியாற்றிய பெண் செயல் அலுவலர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

காஞ்சிபுரம், வல்லக்கோட்டையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில், முதல் நிலை செயல் அலுவலராக சிந்துமதி, 48, என்பவர் பணியாற்றினார். இவர், கோவில் பணத்தை கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அறநிலையத் துறை மண்டல தணிக்கை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், முறைகேடு நடந்தது உறுதியானது.இது குறித்த அறிக்கை, அறநிலையத் துறை கமிஷனருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதையடுத்து, அறநிலையத் துறை கமிஷனர் உத்தரவுப்படி சிந்துமதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதையடுத்து, புதிய செயல் அலுவலராக நற்சோணை என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.ரூ.15 லட்சம் மோசடிகோவில் மடப்பள்ளியில் இருந்து இரும்பு கழிவுகளை விற்று பணம் சுருட்டியது, அன்னதான திட்டத்தில் முறைகேடு செய்தது என சிந்துமதி, 15 லட்சம் ரூபாய் வரை பணம் கையாடலில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து, அதிகாரிகள் விசாரிக்கின்றனர். ஏற்கனவே இதே கோவிலில் நடந்த தவறுக்காக 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட சிந்துமதி, அதன் பின் திருவண்ணாமலை மாவட்டத்தில் பணி செய்தார். மீண்டும் வல்லக்கோட்டை முருகன் கோவிலில் பணியில் சேர்ந்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X