பொது செய்தி

தமிழ்நாடு

வளைந்து... நெளிந்து

Added : ஆக 28, 2021
Share
Advertisement
திருப்பூர்:குமார் நகர், வளையங்காடு செல்லும் ரோடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.திருப்பூர் - அவிநாசி ரோடு, குமார் நகரிலிருந்து வளையங்காடு, சாமுண்டிபுரம் வழியாக சிறுபூலுவபட்டி ரிங் ரோடு சென்று சேரும் ரோடு உள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகள், பனியன் உற்பத்தி மற்றும் சார்பு நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், பள்ளி, மருத்துவமனை,
 வளைந்து... நெளிந்து

திருப்பூர்:குமார் நகர், வளையங்காடு செல்லும் ரோடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.திருப்பூர் - அவிநாசி ரோடு, குமார் நகரிலிருந்து வளையங்காடு, சாமுண்டிபுரம் வழியாக சிறுபூலுவபட்டி ரிங் ரோடு சென்று சேரும் ரோடு உள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகள், பனியன் உற்பத்தி மற்றும் சார்பு நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், பள்ளி, மருத்துவமனை, திருமண மண்டபங்கள் உள்ளிட்டவை இப்பகுதியில் ஏராளமானவை உள்ளன.

தினமும் அதிகாலை முதல் நள்ளிரவு வரை இந்த வழியே பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களும் அதிகளவில் இந்த ரோட்டை பயன்படுத்துகின்றன.இந்த ரோடு நீண்ட காலமாகவே குண்டும் குழியுமாக மோசமான நிலையில் உள்ளது.

இந்நிலையில், பாதாள சாக்கடைக்கு அமைத்த குழிகளும், வாகன ஓட்டிகளை பாடாய் படுத்துகின்றன. லேசான மழை பெய்தால் கூட ரோடுகளில் உள்ள குழிகளிலும், ரோட்டோரங்களிலும் மழை நீர் தேங்கி பெரும் அவதி ஏற்படுகிறது. மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள இந்த ரோட்டை சீரமைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X