பொது செய்தி

தமிழ்நாடு

கட்டட அனுமதியில் குளறுபடி? 'வாட்ஸ் ஆப்'பில் புகார் அளிக்கலாம்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
சென்னை : ''சென்னையில் கட்டட அனுமதி தொடர்பான புகார்களை, 1913 மற்றும் 94451 90748 என்ற 'வாட்ஸ் ஆப்' எண்ணில் தெரிவிக்கலாம்,'' என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.இது குறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:சென்னை மாநகராட்சியில் கட்டட அனுமதி பெற, மாநகராட்சி இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான வழிக்காட்டு நெறிமுறைகள், www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில்

சென்னை : ''சென்னையில் கட்டட அனுமதி தொடர்பான புகார்களை, 1913 மற்றும் 94451 90748 என்ற 'வாட்ஸ் ஆப்' எண்ணில் தெரிவிக்கலாம்,'' என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:சென்னை மாநகராட்சியில் கட்டட அனுமதி பெற, மாநகராட்சி இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான வழிக்காட்டு நெறிமுறைகள், www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 5,000 முதல் 10 ஆயிரம் சதுர அடிக்குள் உள்ள குடியிருப்பு மற்றும் வணிக கட்டடங்களுக்கு, நகரமைப்பு தலைமை பொறியாளர் அனுமதி அளிப்பார்.

அதே போல், 10 ஆயிரம் சதுர அடிக்கு மேல், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் வாயிலாக திட்ட அனுமதி அளிக்கப்பட்டு, கட்டட அனுமதிக்காக மாநகராட்சிக்கு அனுப்பப்படுகிறது.கட்டட அனுமதிக்கான விண்ணப்பத்தின் மீது அலுவலர்களால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, உரிய கட்டணம் செலுத்துவதற்கான கேட்பு ரசீது அளிக்கப்படுகிறது. கேட்பு ரசீதை, விண்ணப்பதாரர் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கட்டண தொகையை இணையதளத்தில் அல்லது வரவோலை முறையில் செலுத்தியதும் இணையதளத்தில் கட்டட அனுமதி அளிக்கப்படுகிறது. முறையாக விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு, 30 நாட்களுக்குள் இணையதளம் வழியாக கட்டட அனுமதி அளிக்கப்படுகிறது.

மேலும், 5,000 சதுர அடி மற்றும் அதற்கு கீழ் உள்ள கட்டடங்களுக்கு இணையதளம் வழியாக பெறப்பட்ட விண்ணப்பங்களின் பேரில், 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட மண்டல செயற்பொறியாளர் அனுமதி அளிப்பார். நிலுவையில் உள்ள மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டு, கட்டட அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.இது குறித்து, பொதுமக்கள் புகார் தெரிவிக்க விரும்பினால், மாநகராட்சியின், 1913 என்ற தொலைபேசி எண் மற்றும் 94451 90748 என்ற 'வாட்ஸ் ஆப்' எண்ணிலும் தெரிவிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X