பொது செய்தி

தமிழ்நாடு

'ஸ்டார்ட் அப்களுக்கு சிறந்த எதிர்காலம்'

Added : ஆக 28, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் நிப்ட்-டீ கல் லுாரி தொழில்முனைவோர் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் சார்பில், புதிய தொழில்முனைவோருக்கான மூன்று நாள் ஆன்லைன் கருத்தரங்கம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் முரளிதரன் துவக்கி வைத்தார்.சென்னை தொழில்முனைவோர் திறன் பயிற்சி மைய இணை இயக்குனர் பாஸ்கரன் பேசியதாவது:புதிய தொழில்முனைவோருக்கு, அரசு, கடனுதவி, மானியங்கள் வழங்கி கைகொடுக்கிறது;

திருப்பூர்:திருப்பூர் நிப்ட்-டீ கல் லுாரி தொழில்முனைவோர் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் சார்பில், புதிய தொழில்முனைவோருக்கான மூன்று நாள் ஆன்லைன் கருத்தரங்கம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் முரளிதரன் துவக்கி வைத்தார்.சென்னை தொழில்முனைவோர் திறன் பயிற்சி மைய இணை இயக்குனர் பாஸ்கரன் பேசியதாவது:புதிய தொழில்முனைவோருக்கு, அரசு, கடனுதவி, மானியங்கள் வழங்கி கைகொடுக்கிறது; அவற்றை பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்கவேண்டும். ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு, சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது.மின்சார வாகனம் தயாரிப்பாளர்களுக்கு, வர்த்தக வாய்ப்பு அதிகரித்துவருகிறது. எந்த ஒரு தொழில் துவங்கும்முன், அந்த தொழில் சார்ந்த சாதக பாதகங்களை அலசி ஆராய வேண்டும். சுய முதலீடு, கடின உழைப்பு அவசியம். வங்கி கடன்கள் பெறுவதற்கு, தொழில் மாதிரி திட்டம் தயாரித்தல் மிக முக்கியமானதாக உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.பயிற்சியாளர் நவீன், தொழில் மாதிரி படிவம் தயாரித்தல் குறித்து விளக்கம் அளித்தார். தொழில்முனைவோர் பங்கேற்று, தங்கள் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X