பொது செய்தி

தமிழ்நாடு

இஸ்கானில் கிருஷ்ண ஜெயந்தி நேரலையில் கண்டுகளிக்கலாம்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
சென்னை : சென்னை 'இஸ்கான்' சார்பில் நடத்தப்படும் இரண்டு நாள் கிருஷ்ண ஜெயந்தி விழாவை, 'ஆன்-லைன்' வாயிலாக கண்டுகளிக்கலாம்.இஸ்கான் எனப்படும் கிருஷ்ண பக்தி இயக்கம்சார்பில், கிருஷ்ண ஜெயந்தி விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக நடத்தப்படுகிறது. நாடு முழுதும், நாளை கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இஸ்கான் சார்பில், இரண்டு நாட்கள் விழா நடக்கிறது.சென்னையில் நாளை காலை

சென்னை : சென்னை 'இஸ்கான்' சார்பில் நடத்தப்படும் இரண்டு நாள் கிருஷ்ண ஜெயந்தி விழாவை, 'ஆன்-லைன்' வாயிலாக கண்டுகளிக்கலாம்.

இஸ்கான் எனப்படும் கிருஷ்ண பக்தி இயக்கம்சார்பில், கிருஷ்ண ஜெயந்தி விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக நடத்தப்படுகிறது. நாடு முழுதும், நாளை கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இஸ்கான் சார்பில், இரண்டு நாட்கள் விழா நடக்கிறது.சென்னையில் நாளை காலை 10:00 மணி முதல் நாம சங்கீர்த்தனம், நடக்கிறது. இரவு 10:30 மணிக்கு ராதா கிருஷ்ணனுக்கு அபிஷேகம் நடக்கிறது.

அதைத் தொடர்ந்து, கிருஷ்ணரின் தெய்வீக தோற்றத்தை நினைவு கூரும் தரிசனம், ஆரத்தி நடக்கிறது.வரும் ஆக., 31ம் தேதி இஸ்கான் சார்பில் உலகம்முழுதும் நிறுவனர் ஆச்சார்யாவின் 125வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்று அபாயம் காரணமாக, இந்தாண்டும் கிருஷ்ண ஜெயந்தி விழா, 'ஆன்-லைன்' வாயிலாக, நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. விழாவை, https://www.youtube.com/c/iskconchennai என்ற இணையதள முகவரியில் கண்டுகளிக்கலாம். கிருஷ்ண ஜெயந்தி விழா குறித்த முழு தகவல்களும், http://www.iskconchennai.org என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு, கோவில் தலைவர் சுமித்ரா கிருஷ்ண தாஸ் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X