பொது செய்தி

தமிழ்நாடு

மாநகராட்சியை கண்டித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
சென்னை : திருவொற்றியூரில், மாநகராட்சியை கண்டித்து, பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சென்னை, பா.ஜ., வடசென்னை கிழக்கு மாவட்டம், திருவொற்றியூர் கிழக்கு மண்டல் சார்பாக, அடிப்படை வசதிகளை நிறைவேற்றாத, மாநகராட்சியை கண்டித்து, தேரடி சந்திப்பில், நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.திருவொற்றியூர் கிழக்கு மண்டல தலைவர் ஓம் பிரகாஷ் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர், பதாகைகள் ஏந்தி

சென்னை : திருவொற்றியூரில், மாநகராட்சியை கண்டித்து, பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னை, பா.ஜ., வடசென்னை கிழக்கு மாவட்டம், திருவொற்றியூர் கிழக்கு மண்டல் சார்பாக, அடிப்படை வசதிகளை நிறைவேற்றாத, மாநகராட்சியை கண்டித்து, தேரடி சந்திப்பில், நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.திருவொற்றியூர் கிழக்கு மண்டல தலைவர் ஓம் பிரகாஷ் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர், பதாகைகள் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, எல்லையம்மன் கோவில் தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும்; தியாகராஜர் கோவிலை சுற்றி, அசைவ உணவகங்கள் மற்றும் இறைச்சி கடைகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன கோஷங்கள் எழுப்பினர்.பின், அவர்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X