பொது செய்தி

தமிழ்நாடு

தேவாலய கொடியேற்றத்தில் பக்தர்கள் பங்கேற்க தடை

Added : ஆக 28, 2021
Share
Advertisement
சென்னை : கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக, 'பெசன்ட் நகர் வேளாங்கண்ணி தேவாலய கொடியேற்ற நிகழ்ச்சிக்கு, பொதுமக்கள் வர தடை விதிக்கப்படுகிறது. கடற்கரை பகுதிக்கும் பொதுமக்கள் வர வேண்டாம்' என, சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.இது குறித்து, சென்னை மாநகராட்சி மற்றும் காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:சென்னை, பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் 49வது

சென்னை : கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக, 'பெசன்ட் நகர் வேளாங்கண்ணி தேவாலய கொடியேற்ற நிகழ்ச்சிக்கு, பொதுமக்கள் வர தடை விதிக்கப்படுகிறது.

கடற்கரை பகுதிக்கும் பொதுமக்கள் வர வேண்டாம்' என, சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.இது குறித்து, சென்னை மாநகராட்சி மற்றும் காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:சென்னை, பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் 49வது ஆண்டு திருவிழா, இன்று முதல் செப்., 8ம் தேதி வரை நடக்கிறது. இதனால், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க கோரப்படுகிறது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக, பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் அனுமதி இல்லை. எனவே, கொடியேற்றம் மற்றும் தேரோட்டம் நிகழ்ச்சிக்கு வருவதை தவிர்க்க வேண்டும். இந்நிகழ்ச்சிகளை தொலைகாட்சி மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக காணலாம் திருவிழா நடைபெறும் நாட்களில், பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரை பகுதிக்கு பொதுமக்கள் வர தடை விதிக்கப்படுகிறது

அன்னை வேளாங்கண்ணி திருத்தலம் மற்றும் பெசன்ட் நகரை சுற்றியுள்ள வர்த்தக வளாகங்கள், கடைகள் செயல்பட, செப்., 8ம் தேதி வரை அனுமதி மறுக்கப்படுகிறது பொதுமக்களும், பக்தர்களும், சென்னை மாநகராட்சி, காவல் துறையின் வழிகாட்டுதல்களை பின்பற்றி ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X