வகுப்புகள் துவங்குகின்றன ஆசிரியர்கள் மகிழ்ச்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வகுப்புகள் துவங்குகின்றன ஆசிரியர்கள் மகிழ்ச்சி

Added : ஆக 28, 2021
Share
திருப்பூர்:செப்., 1 முதல் பள்ளிகளில், ஒன்பது முதல் பிளஸ் 2 வரை வகுப்புகள் நடைபெற உள்ளன. பள்ளிகள் திறக்கப்படுவதால், மாணவர்கள், பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.கொரோனா பரவல் காரணமாக, பள்ளிகள் திறப்பில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கல்வித்தொலைக்காட்சி மூலம், பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.மாணவர் சேர்க்கை, புத்தக வினியோகம், மாணவர்களுக்கு

திருப்பூர்:செப்., 1 முதல் பள்ளிகளில், ஒன்பது முதல் பிளஸ் 2 வரை வகுப்புகள் நடைபெற உள்ளன. பள்ளிகள் திறக்கப்படுவதால், மாணவர்கள், பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.கொரோனா பரவல் காரணமாக, பள்ளிகள் திறப்பில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கல்வித்தொலைக்காட்சி மூலம், பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

மாணவர் சேர்க்கை, புத்தக வினியோகம், மாணவர்களுக்கு தேர்வு நடத்துதல், பள்ளி வளாகப் பராமரிப்பு போன்ற பணிகளுக்காக, ஆசிரியர்கள் சுழற்சி முறையில், பள்ளிகளுக்கு வந்து சென்றனர்.இப்பணிகளை துரிதப்படுத்தும் வகையில், அனைத்து வகை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஆக., 2- முதல் தினமும் பள்ளிக்கு வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.திருப்பூரில் வீடு வீடாக சென்று மாணவர்களின் கல்வித்திறன் குறித்து ஆசிரியர்கள் ஆய்வு நடத்தி வந்ததும், அவர்களிடம் கலந்துரையாடியதும் ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தியது.

ஆசிரியர்கள் கூறியதாவது:பெரும்பாலான மாணவர்கள், நேரடியாக பள்ளிக்கு வந்து படிக்கவே விரும்புகின்றனர். தொற்று தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றியேனும், மாணவர்கள் பள்ளிக்கு வரும் சூழல் உருவாக வேண்டும். ஒன்பது, பத்து, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களையாவது நேரில் வரவழைத்து கற்றுத்தந்தால்தான், அவர்களுக்கு பாடங்கள் எளிதாகப் புரியும் என்று வலியுறுத்தி வந்தோம்.வெறுமனே ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வந்து செல்வதால் எந்தப்பயனும் ஏற்பட்டுவிடப்போவதில்லை. தற்போது வகுப்புகள் துவங்கப்பட உள்ளதால் மகிழ்ச்சியடைந்துள்ளோம்.இருப்பினும், அனைத்து மாணவர்களும் எப்போது பள்ளிக்கு வரப்போகின்றனரோ என்ற ஏக்கமும் ஆசிரியர்களிடம் உள்ளது.இவ்வாறு, ஆசிரியர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X