சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காரில் 'வக்கீல் ஸ்டிக்கர்' ஒட்டி கஞ்சா கடத்தியோர் கைது

Added : ஆக 28, 2021
Share
Advertisement
காசிமேடு : காசிமேடில், 'வக்கீல் ஸ்டிக்கர்' ஒட்டி, காரில் கஞ்சா கடத்திய பெண் உட்பட மூவரை, போலீசார் கைது செய்தனர்.காசிமேடு, பாலகிருஷ்ணா தெருவில், காரில் கஞ்சா கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 'வக்கீல் ஸ்டிக்கர்' ஒட்டப்பட்ட கார் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.இதையடுத்து,
 காரில் 'வக்கீல் ஸ்டிக்கர்' ஒட்டி கஞ்சா கடத்தியோர் கைது

காசிமேடு : காசிமேடில், 'வக்கீல் ஸ்டிக்கர்' ஒட்டி, காரில் கஞ்சா கடத்திய பெண் உட்பட மூவரை, போலீசார் கைது செய்தனர்.

காசிமேடு, பாலகிருஷ்ணா தெருவில், காரில் கஞ்சா கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 'வக்கீல் ஸ்டிக்கர்' ஒட்டப்பட்ட கார் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.இதையடுத்து, அந்த காரை பின் தொடர்ந்து சென்று, செங்குன்றம் அருகே மடக்கி பிடித்தனர். போலீசார் சோதனையிட்டதில், காரில் நான்கு கிலோ கஞ்சா இருந்தது.

கஞ்சா மற்றும் அதை கடத்த பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, மணலி புதுநகரைச் சேர்ந்த பார்வதி, 32, வண்டலுாரைச் சேர்ந்த கனகராஜ், 28, நரேஷ்குமார், 27, ஆகியோரை, நேற்று கைது செய்தனர். பார்வதி மீது, எண்ணுார், எம்.கே.பி.நகர், செங்குன்றம் காவல் நிலையங்களில், ஏற்கனவே கஞ்சா விற்ற வழக்குகள் உள்ளன. பின், மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X