பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி போடாத மாணவர்கள் ஆதாருடன் கல்லுாரிக்கு வாங்க!

Added : ஆக 28, 2021
Share
Advertisement
சென்னை : கொரோனா தடுப்பூசி போடாத பேராசிரியர்கள், மாணவர்கள், ஆதார் உள்ளிட்ட அரசு அங்கீகரித்த அடையாள அட்டையுடன் கல்லுாரிகளுக்கு வரும் படி, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கூறினார். இது குறித்து, சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது:சென்னையில், இதுவரை 38 லட்சத்து 72 ஆயிரத்து 322 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். அதில், 26 லட்சத்து 86 ஆயிரத்து 366 பேர் முதல் தவணை

சென்னை : கொரோனா தடுப்பூசி போடாத பேராசிரியர்கள், மாணவர்கள், ஆதார் உள்ளிட்ட அரசு அங்கீகரித்த அடையாள அட்டையுடன் கல்லுாரிகளுக்கு வரும் படி, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கூறினார்.

இது குறித்து, சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது:சென்னையில், இதுவரை 38 லட்சத்து 72 ஆயிரத்து 322 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். அதில், 26 லட்சத்து 86 ஆயிரத்து 366 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 11 லட்சத்து 55 ஆயிரத்து 956 பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியும் போட்டு உள்ளனர்.குடிசை பகுதிகளில் 43 ஆயிரத்து 112 பேருக்கும்; மாற்றுத்திறனாளிகள் 13 ஆயிரத்து 577 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மேலும், 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போட்டதில் 6,239 பேர் பயன்அடைந்துள்ளனர்.இந்நிலையில், செப்., 1ம் தேதி முதல் கல்லுாரிகள் திறக்கப்படுவதால், சென்னையில் உள்ள 112 கல்லுாரிகளிலும் சிறப்பு தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.எனவே, தடுப்பூசி போடாத பேராசிரியர்கள், மாணவர்கள், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அரசு அங்கீகரித்த அடையாள அட்டைகளில் ஒன்றை கொண்டு வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X