பொது செய்தி

தமிழ்நாடு

பயிர் காப்பீடு இறுதி நாள் அறிவிப்பு

Added : ஆக 28, 2021
Share
Advertisement
விருதுநகர்: விருதுநகரில் வேளாண் உழவர் நலத்துறை சார்பில் பிரதமரின் திருந்தியமைக்கப்பட்ட பயிர் காப்பீடு திட்டம் 2020--21 ஆண்டு காரீப் 2021 பருவத்திற்கான மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது.இதில் கலெக்டர் மேகநாதரெட்டி பேசியதாவது: காரீப் பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய விவசாயிகள் வேளாண் பயிர்களுக்கு(மக்காச்சோளம், சோளம், பாசிப்பயறு, உளுந்து, துவரை, நிலக்கடலை,

விருதுநகர்: விருதுநகரில் வேளாண் உழவர் நலத்துறை சார்பில் பிரதமரின் திருந்தியமைக்கப்பட்ட பயிர் காப்பீடு திட்டம் 2020--21 ஆண்டு காரீப் 2021 பருவத்திற்கான மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது.இதில் கலெக்டர் மேகநாதரெட்டி பேசியதாவது: காரீப் பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய விவசாயிகள் வேளாண் பயிர்களுக்கு(மக்காச்சோளம், சோளம், பாசிப்பயறு, உளுந்து, துவரை, நிலக்கடலை, பருத்தி, எள்) பயிர் காப்பீடு பதிவு செய்ய ஆக. 31, தோட்டக்கலை பயிர்களில் வாழை பயிருக்கு பயிர் காப்பீடு பதிவு செய்ய செப். 5, வெங்காயம் பயிருக்கு ஆக. 31 கடைசி நாள் ஆகும்.பயிர் காப்பீடு கட்டணம் ஏக்கருக்கு மக்காச்சோளம் ரூ.548, சோளம் ரூ.157, பாசிப்பயறு, உளுந்து, துவரை பயிர்களுக்கு ரூ.265, நிலக்கடலை ரூ.385, எள் ரூ.148, பருத்தி ரூ.348 செலுத்த வேண்டும். தோட்டக்கலை பயிர்களில் வாழைக்கு ரூ.3265, வெங்காயத்திற்கு ரூ.1631 செலுத்த வேண்டும், என்றார்.வேளாண் இணை இயக்குனர் உத்தண்டராமன், நேர்முக உதவியாளர் சங்கர் எஸ்.நாராயணன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X