பொது செய்தி

தமிழ்நாடு

கல்லுாரி 'சீட்' ஏக்கம்!

Added : ஆக 28, 2021
Share
Advertisement
தொற்று, பலரது வாழ்க்கையைப் புரட்டிப்போட்டது. பெற்றோரை இழந்த குழந்தைகள் பலர். 'டீன் ஏஜ்' பருவத்தில், பெற்றோரை இழந்த மாணவ, மாணவிகளின் கல்விச்சூழல் கேள்விக்குறியாகியிருக்கிறது.அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் இணைய மற்றும் இணைய வழி மூலம் விண்ணப்பம் பெறப்பட்டு, கடந்த 25ம் தேதி முதல், 'கவுன்சிலிங்' மூலம், மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. கொரோனாவால் பெற்றோர்

தொற்று, பலரது வாழ்க்கையைப் புரட்டிப்போட்டது. பெற்றோரை இழந்த குழந்தைகள் பலர். 'டீன் ஏஜ்' பருவத்தில், பெற்றோரை இழந்த மாணவ, மாணவிகளின் கல்விச்சூழல் கேள்விக்குறியாகியிருக்கிறது.அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் இணைய மற்றும் இணைய வழி மூலம் விண்ணப்பம் பெறப்பட்டு, கடந்த 25ம் தேதி முதல், 'கவுன்சிலிங்' மூலம், மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. கொரோனாவால் பெற்றோர் அல்லது தாய், தந்தையில் யாராவது ஒருவரை இழந்த நிலையில், மாணவ, மாணவியர் பலர், 'சீட்' கேட்டு, அரசு கல்லுாரிகளுக்கு வருகின்றனர்.''கொரோனாவால், பெற்றோரை இழந்த பிறகு, இவர்களது மகன்/மகளின் குடும்ப சூழலே மாறிவிட்டது; பிளஸ் 2 முடித்தவர்கள், கல்லுாரியில் படிக்க விரும்புகின்றனர். அரசு கல்லுாரியில், எந்த 'சீட்' கிடைத்தாலும் பரவாயில்லை என்ற மனநிலையில், அவர்கள் உள்ளனர்.கல்லுாரிகளில் இட ஒதுக்கீடு, மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்து வரும் நிலையில், பெற்றோரை இழந்தவர்களுக்கு அரசு கல்லுாரியில் இடம் கிடைக்க செய்ய, உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்கின்றனர், பெற்றோரை இழந்த பிள்ளைகளின் உறவினர்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X