பொது செய்தி

தமிழ்நாடு

பிளாஸ்டிக்கிற்கு மாற்று பொருள் வியாபாரிகளுக்கு 10 நாள் அவகாசம்

Added : ஆக 28, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை : 'தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வியாபாரிகள் பயன்படுத்தி வருவதால், மாற்றுப் பொருட்கள் பயன்பாட்டிற்காக வியாபாரிகளுக்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது,'' என, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி கூறினார்.சென்னையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது குறித்து, வணிகர்களுடன், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி, 'அம்மா'
 பிளாஸ்டிக்கிற்கு மாற்று பொருள் வியாபாரிகளுக்கு 10 நாள் அவகாசம்

சென்னை : 'தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வியாபாரிகள் பயன்படுத்தி வருவதால், மாற்றுப் பொருட்கள் பயன்பாட்டிற்காக வியாபாரிகளுக்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது,'' என, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி கூறினார்.

சென்னையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது குறித்து, வணிகர்களுடன், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி, 'அம்மா' மாளிகையில் நேற்று ஆலோசனை நடத்தினார்.அப்போது, பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு குறித்து, காணொலி வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இதைத்தொடர்ந்து, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி கூறியதாவது:சென்னையில், ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.

அதன்படி, பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைகளுக்கு 3 லட்சம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.வணிகர்கள், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான பொருட்களை பயன்படுத்த 10 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். அதற்குள், பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக, சுற்றுச்சூழல் மாசுபடாத பொருட்களை பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால், கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
29-ஆக-202116:29:57 IST Report Abuse
Mani . V இப்படியா ஒட்டு மொத்தமும் மண்ணு மூட்டையாய் இருக்கும்? பிளாஸ்டிக் உற்பத்தியை நிறுத்தினால், எப்படி வியாபாரிகள் உபயோகப்படுத்துவார்கள்? உற்பத்தியாளர்களிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு மக்களை சாகடிக்க வேண்டியது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X