பொது செய்தி

தமிழ்நாடு

'நிழல் இல்லாத நாள்'; அதிசயம் தந்த அறிவியல் நிகழ்வு: வியப்பில்ஆழ்ந்த மாணவர்கள், பொது மக்கள்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
ராஜபாளையம் :'நிழல் இல்லாத நாள்' என்ற அறிவியல் நிகழ்வு ஏற்பட்டதை ராஜபாளையம் உள்ளிட்ட இடங்களில் நேரடியாக அனுபவித்த மாணவர்கள் ,பொது மக்கள் வியப்பில்ஆழ்ந்தனர்.நிழல் என்பது நம்மை பின் தொடரும் சாதாரண விஷயமே. இந்த நிழல்கள் ஆண்டுக்கு இரண்டு நாட்கள் மட்டும் ஒரு சில வினாடிகள் நம்மை பின் தொடராது என்பதுதான் ஆச்சரியம். அந் நாளை தான் நாம் 'நிழல் இல்லாத நாள்'

ராஜபாளையம் :'நிழல் இல்லாத நாள்' என்ற அறிவியல் நிகழ்வு ஏற்பட்டதை ராஜபாளையம் உள்ளிட்ட இடங்களில் நேரடியாக அனுபவித்த மாணவர்கள் ,பொது மக்கள் வியப்பில்ஆழ்ந்தனர்.நிழல் என்பது நம்மை பின் தொடரும் சாதாரண விஷயமே. இந்த நிழல்கள் ஆண்டுக்கு இரண்டு நாட்கள் மட்டும் ஒரு சில வினாடிகள் நம்மை பின் தொடராது என்பதுதான் ஆச்சரியம். அந் நாளை தான் நாம் 'நிழல் இல்லாத நாள்' என்கிறோம்.இந்தஅறிவியல் நிகழ்வு விருதுநகர் மாவட்டத்தில் நேற்று சரியாக 12:19 மணிக்கு ஏற்பட்டது. நாம் நம்புவது போல் ஒவ்வொரு நாளும் சூரியன் நமது நேர் செங்குத்தாக வருவதில்லை.இதை தினமும் எதாவது ஒரு நேரான இரும்பு கம்பியை நட்டுவைத்துசோதித்து அறிந்து கொள்ளலாம். சூரியன் உச்சியை அடையும் போது அது சிறிது வடக்கு, தெற்கு சாய்ந்து இருக்கும். பூமியானது சூரியனின் சுற்றுவட்டப்பாதையில் 23.5 டிகிரி சாய்வாக இருப்பதால் இந்நிகழ்ச்சி ஏற்படுகிறது. இதுவே காலங்கள் மாறுவதற்கு காரணமாக உள்ளது.நாம் இருக்கும் இடத்தில் சூரியன் தென்திசையில் உச்சம் அடைவது டிச. 21 .இது குளிர்காலம். வடக்கு திசையில் உச்சம் என்பது ஜூன் 21. இது கோடைகாலம்.வடக்கு திசையில் சூரியன் நகரும் காலம் குளிர்காலத்திலிருந்து கோடை காலமாக மாறுகிறது. நாம் கடக ரேகைக்கும் மகர ரேகைக்கும் இடையில் வாழ்கிறோம்.சூரியன் வடதிசை பயணத்தில் ஒரு நாளும், தென் திசை பயணத்தில் ஒரு நாளும் சரியாக உங்கள் உச்சந்தலைக்கு மேலே செல்லும்.இவ்விரண்டு நாட்களில் ஒரு செங்குத்து கம்பியின் நிழலானது அதன் கீழேயே குறுதி விழும். இதையே நிழல் இல்லாத நாள்'என குறிப்பிடுகிறார்கள்.தமிழகத்தில் ஏப்.10 முதல் 24- , ஆக.18 முதல் செப்.1- வரையிலும் நிழல் இல்லா நாள் ஏற்படும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம்அறிவித்திருந்தது.இதன் படி நேற்று விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மதியம் 12:19 மணிக்கு இந்நிகழ்வு ஏற்பட்டது. பல்வேறுபகுதிகளில் இதை எதிர்பார்த்திருந்த அறிவியல் ஆசிரியர்கள், தங்கள் மாணவர்களுடன் நேரடியாக பகிர்ந்து கொண்டனர்.ராஜபாளையம் பி.ஏ.சி.எம் .,மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் மாரிமுத்து தலைமையில் அறிவியில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.நிழல் இல்லாத நாள் என்ற அறிவியல் குறித்து விளக்கப்பட்டதோடு, குறிப்பிட்ட நேரத்திற்காக காத்திருந்து பேப்பர் உருளைகளை நிற்க வைத்தும், அனைவரும் நிற்க வைத்து நிழல்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைவது குறித்து செய்முறை விளக்கத்துடன் நிகழ்ச்சி நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X