தமிழ்நாடு

பள்ளி பகுதிகளில் சுகாதாரக்கேடு, ஆக்கிரமிப்பு

Added : ஆக 28, 2021
Share
Advertisement
ஸ்ரீவில்லிபுத்தூர், :-விருதுநகர் மாவட்டத்தில் இன்னும் 2 நாட்களில் உயர்,மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான வகுப்புகள் துவங்க உள்ளதால் பள்ளி பகுதிகளை சுற்றி காணப்படும் சுகாதாரக் கேடு, போக்குவரத்து இடையூறுகள், ஆக்கிரமிப்புகள், மணல் குவியல்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கொரோனா காரணமாக 2020முதல் பள்ளி, கல்லுாரிகள் சரிவர செயல்படாமல் முடங்கி


ஸ்ரீவில்லிபுத்தூர், :-விருதுநகர் மாவட்டத்தில் இன்னும் 2 நாட்களில் உயர்,மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான வகுப்புகள் துவங்க உள்ளதால் பள்ளி பகுதிகளை சுற்றி காணப்படும் சுகாதாரக் கேடு, போக்குவரத்து இடையூறுகள், ஆக்கிரமிப்புகள், மணல் குவியல்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கொரோனா காரணமாக 2020முதல் பள்ளி, கல்லுாரிகள் சரிவர செயல்படாமல் முடங்கி கிடக்கின்றன. முறையான வகையில் பாடங்கள் நடத்தாமல் தேர்வுகள் வைக்காமலும் மாணவர்கள் ஆல் பாஸ் செய்யப்பட்டுள்ளனர். ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்களும் நடத்தப்படுகிறது. இன்றைய நிலையில் தற்போது நோய் பரவல் குறைந்து வருவதால் இரு நாட்களில் 9 முதல் பிளஸ் 2 வரை மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான வழிகாட்டுதல் விதிமுறைகளை பள்ளி நிர்வாகத்திற்கும், ஆசிரியர்களுக்கும் அரசு தெரியப்படுத்தியுள்ளது.இதையடுத்து ஒவ்வொரு பள்ளியிலும் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு வர உள்ளனர். பள்ளிக்கு வரும் வழியில் உள்ள ரோடுகளில் மணல் குவியல்கள் கிடக்கிறது. பள்ளியை சுற்றிய பகுதிகளில் சாக்கடைகளால் சுகாதாரக் கேடுகள் உள்ளன.மாணவர்கள் வரும் பாதையில் ஆக்கிரமிப்புகளும் அதிகரித்து உள்ளது. மெயின் ரோடுகளில் டூவீலர்கள், கனரக வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்பட்டுள்ளது. இது சைக்கிளில் வரும் மாணவர்களுக்கு பெரும் இடையூறை ஏற்படுத்தும்..................தேவை மனப்பூர்வ நடவடிக்கைபல மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பதால் பள்ளி செல்லும் ரோட்டில் உள்ள மணல் குவியல்களை அகற்ற வேண்டும். தாறுமாறாக நிறுத்தப்படும் கனரக வாகனங்கள், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு,அதிவேகத்தில் செல்லும் டூவீலர்கள், டிராக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு அனைத்து அரசுத்துறை அதிகாரிகளின் மனப்பூர்வ நடவடிக்கை மிகவும் அவசியமாகிறது.- சீனிவாசன், பெற்றோர்,ஸ்ரீவில்லிபுத்துார்................

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X