சிவகாசி : இன்றைய காலத்தில் பெண்கள் பெரும்பாலும் தங்களுடைய சொந்த காலிலேயே நிற்க விரும்புகின்றனர். எங்களாலும் முடியும் என ஏதாவது ஒரு வேலையை செய்து வருமானம் ஈட்டுகின்றனர்.குறிப்பாக பெண்கள் ஆர்வமுடன் செய்கின்ற தொழிலில் தையலும் ஒன்று. ஆண்களும் இத்தொழிலை செய்தாலும் பெண்களுக்கு என உள்ள சுடிதார், பிளவுஸ் உள்ளிட்ட ஆடைகளை பெண்கள் தைத்து கொடுப்பதையே பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனர்.இத்தொழிலை கற்றால் தையல் பயிற்சி என்ற நிலையை தாண்டி தையல் கலை நிபுணராக மாற முடியும். பெண்கள் அணியும் உடைகளில் ஆரி ஒர்க், எம்பிராய்டரிங் என பல்வேறு கலைகள் உள்ளன.இந்த கலையை கற்ற பின்பு பெண்கள் சுயமாக வேலை செய்து குடும்ப பொருளாதாரத்தை பெருக்கலாம். யாரையும் நம்பி இல்லாமல் சொந்த காலில் நிற்கலாம். அந்த வகையில் திருத்தங்கல் முத்து தையல் பயிற்சி நிறுவனத்தில் மத்திய அரசின் தேசிய மேம்பாட்டு வளர்ச்சி கழகம், மாநில அரசின் மகளிர் திட்டம் சார்பில் பெண்களுக்கு இலவசமாக தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது.தையல் கலை பயிற்சி தவிர அழகு கலை பயிற்சி, அலைபேசி பழுது நீக்கல் , ஆரி ஒர்க், எம்ப்ராய்டரிங், ஜூவல் மேக்கிங் என பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. 3 மாத கால பயிற்சிக்கு பின் சான்றிதழ் வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்த பின் ரூ. 3500 நிதியும் வழங்கப்படுகிறது. இதில் பெண்களும் ஆர்வமாக பங்கேற்று தொழில் முனைவர்களாகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE