பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தடுப்பூசி

Added : ஆக 29, 2021
Share
Advertisement
திருப்பூர் மாவட்டத்தில் நிரந்தரமாக செயல்படும் தடுப்பூசி மையங்கள், அவற்றின் செயல்படும் நேரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில் உள்ள வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகள், டி.எஸ்.கே., நகர் நகர்ப்புற சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் காலை, 9:00 முதல் இரவு, 7:00 மணி வரை கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்கள்,

திருப்பூர் மாவட்டத்தில் நிரந்தரமாக செயல்படும் தடுப்பூசி மையங்கள், அவற்றின் செயல்படும் நேரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில் உள்ள வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகள், டி.எஸ்.கே., நகர் நகர்ப்புற சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் காலை, 9:00 முதல் இரவு, 7:00 மணி வரை கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்படும்.

தலைமை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லுாரியில், 24 மணி நேரமும் தடுப்பூசி மையம் செயல்படுகிறது. இங்கு அனைத்து வகை பயனாளிகள், முதல் தவணை, கர்ப்பிணிகள் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டு கொள்ளலாம்.இம்மையங்களில் கலெக்டர் உத்தரவுப்படி, தினமும் ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுமென, மக்கள் நல்வாழ்வு துறை துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் தெரிவித்தார்.

திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் கடந்த, 23ம் தேதி, 24 மணி நேர தடுப்பூசி மையம் துவங்கப்பட்டது. மூன்று ஷிப்ட்டுக்கு தலா, நான்கு டாக்டர், பத்து செவிலியர் வீதம் மூன்று குழுவினர் பணியாற்றுகின்றனர். முதல் இரண்டு நாளில் கூட்டம் குறைவாக இருந்த நிலையில், அடுத்தடுத்த நாட்களில் நீண்ட வரிசையில் தடுப்பூசிக்கு மக்கள் காத்திருக்கின்றனர். இரவு, 8:00 மணியை கடந்தும் பலர் காத்திருக்கின்றனர். நான்கு நாட்களில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது, என டாக்டர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X