சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள் கட்டடம் இடிந்து சிறுவன் காயம்தந்தை உட்பட 3 பேர் மீது வழக்கு

Added : ஆக 29, 2021
Share
Advertisement
கட்டடம் இடிந்து சிறுவன் காயம்தந்தை உட்பட 3 பேர் மீது வழக்குசிவகாசி: திருத்தங்கல் பாண்டியன் நகர் 2 வது தெருவை சேர்ந்தவர் சீதாராமன் . கட்டட சென்ட்ரிங் கான்ட்ராக்ட் வேலை செய்யும் இவர், அதே பகுதி நாகபாண்டியன் வீட்டில் சென்ட்ரிங் வேலை எடுத்திருந்தார். இப்பணியில் ஈடுபட்ட போது கட்டடத்தின் மாடி படி இடிந்து சீதாராமன் மகன் தானேஸ்வரன் 16, மீது விழுந்தது. கட்டட இடிபாட்டிற்குள்

கட்டடம் இடிந்து சிறுவன் காயம்தந்தை உட்பட 3 பேர் மீது வழக்குசிவகாசி: திருத்தங்கல் பாண்டியன் நகர் 2 வது தெருவை சேர்ந்தவர் சீதாராமன் . கட்டட சென்ட்ரிங் கான்ட்ராக்ட் வேலை செய்யும் இவர், அதே பகுதி நாகபாண்டியன் வீட்டில் சென்ட்ரிங் வேலை எடுத்திருந்தார். இப்பணியில் ஈடுபட்ட போது கட்டடத்தின் மாடி படி இடிந்து சீதாராமன் மகன் தானேஸ்வரன் 16, மீது விழுந்தது. கட்டட இடிபாட்டிற்குள் சிக்கிய சிறுவனை சிவகாசி தீயணைப்பு படையினர் மீட்டனர். மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கட்டட உரிமையாளர் நாகபாண்டியன் 64, கொத்தனார் பிச்சைபாண்டியன் , சீதாராமன் 43, மீது திருத்தங்கல் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.10 ஐ சீண்டிய 60 கைதுசாத்துார்: தாயில்பட்டி டி.கோட்டையூரை சேர்ந்தவர் ஒய்வு பெற்ற தீயணைப்பு வீரர் ராமராஜ் 60. ஆகஸ்ட் 24 ல் அதே ஊரை சேர்ந்த 5 வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமியை பாலியல் சீண்டல் செய்தார் . மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் முதியவரை கைது செய்தனர்.குடியால் இருவர் தற்கொலைசிவகாசி: நாரணாபுரம் இந்திரா நகரை சேர்ந்தவர் ஆனந்தகுமார் 41. டீ கப் கம்பெனியில் வேலை செய்து வரும் இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதய நோயால் பாதிக்கப்பட்ட இவர் மதுவில் விஷம் கலந்து குடித்து இறந்தார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.மற்றொரு தற்கொலை: சிவகாசி கிழக்கு புது தெருவை சேர்ந்தவர் அந்தோணி ராஜ் 32. பழைய இரும்பு கடை நடத்தி வரும் இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. இதற்காக மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் .கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.கருந்திரி பறிமுதல்; இருவர் கைதுசாத்துார்: வெம்பக்கோட்டை எஸ்.ஐ., ராமமூர்த்தி தலைமையிலான போலீசார் ரோந்து சென்ற போது ,வி.மீனாட்சிபுரத்தை சண்முகராஜ் 40, வீட்டின் அருகில் உள்ள தகர செட்டில் இருந்து 300 குரோஸ் கருந்திரி , வேல்முருகன் 43 வீட்டில் 200 குரோஸ் கருந்திரி இருப்பது தெரிந்தது. பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X