கோவிட் தொற்றால் தாயை இழந்த பெண்: ஆக்சிஜன் ஆட்டோ மூலம் 800க்கும் மேற்பட்டோரை காப்பாற்றி சாதனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோவிட் தொற்றால் தாயை இழந்த பெண்: ஆக்சிஜன் ஆட்டோ மூலம் 800க்கும் மேற்பட்டோரை காப்பாற்றி சாதனை

Updated : ஆக 29, 2021 | Added : ஆக 29, 2021 | கருத்துகள் (10)
Share
சென்னை: கோவிட் தொற்றால் தன் தாயை இழந்த பெண், ஆக்சிஜன் ஆட்டோ ஒன்றை உருவாக்கி 800க்கும் மேற்பட்ட கோவிட் நோயாளிகளை மரணத்தின் பிடியிலிருந்து காப்பாற்றி சாதனை படைத்துள்ளார்.சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்தவர் சீதாதேவி 36 வயது நிரம்பிய இவர் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த தன் தாயை காப்பாற்ற போராடியுள்ளார். கோவிட் இரண்டாம் அலையின் போது இந்தியா முழுவதும்

சென்னை: கோவிட் தொற்றால் தன் தாயை இழந்த பெண், ஆக்சிஜன் ஆட்டோ ஒன்றை உருவாக்கி 800க்கும் மேற்பட்ட கோவிட் நோயாளிகளை மரணத்தின் பிடியிலிருந்து காப்பாற்றி சாதனை படைத்துள்ளார்.latest tamil newsசென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்தவர் சீதாதேவி 36 வயது நிரம்பிய இவர் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த தன் தாயை காப்பாற்ற போராடியுள்ளார். கோவிட் இரண்டாம் அலையின் போது இந்தியா முழுவதும் ஏராளமானோர் பாதிப்பு அடைந்தனர். முதல் அலையை விட உயிரிழப்பும் அதிகமாக இருந்தது.


ஆக்சிஜன் பற்றாக்குறை

இந்நிலையில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட தன் 65 வயது தாயினை சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் காத்திருந்தார். பல மணி நேரம் ஆன பிறகும் அனுமதிக்க முடியாமல் போனதால் ஸ்டான்லி மருத்துவமனைக்கு தன் தாயினை அழைத்து சென்றார். அங்கு படுக்கை வசதி கிடைத்தாலும் போதுமான ஆக்சிஜன் கிடைக்கவில்லை. ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக சீதாதேவியின் தாய் உயிரிழக்க நேர்ந்தது.

இச்சம்பவத்தால் மனதளவில் அதிகம் பாதிக்கப்பட்ட சீதாதேவி, இனிமேல் இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது என்று முடிவெடுத்தார். தாயை இழந்த சில நாட்களிலேயே ஆக்சிஜன் வசதியுடன் கூடிய ஆட்டோ ஒன்றை தயார் செய்து ராஜீவ் காந்தி மருத்துவமனை வாசலில் காத்திருந்தார். ஆட்டோ இருக்கையில் அமர்ந்திருந்த சீதா தேவி கோவிட் பாதிப்பு அடைந்தவர்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர், ப்ளோ மீட்டர், மாஸ்க்குகளுடன் தயார் நிலையில் இருந்தார். காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இச்சேவையினை மக்களுக்கு இலவசமாக வழங்கி வந்தார்.

சென்னையில் கோவிட் அலை உச்சத்தில் இருந்த காலத்திலும் ஸ்ட்ரீட் விஷன் சேரிடபிள் ட்ரஸ்ட் , மோகன்ராஜ் மற்றும் சரத்குமார் போன்ற தன்னார்வலர்கள் உதவியுடன் தினசரி 30க்கும் அதிகமான நோயாளிகளுக்கு ஆக்சிஜன் உதவி வழங்கி வந்தார். பகல் நேரங்களில் மருத்துவமனைகளிலும், இரவு நேரங்களில் மாத்தூர், மாதவரம், கொடுங்கையூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களின் அவசர தேவைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் பணியிலும் ஈடுபட்டு வந்தார். இது தவிர தொற்றின் காரணமாக உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய வேண்டிய இடங்களுக்கும் எடுத்து சென்று உதவியுள்ளார்.


latest tamil news
800க்கும் மேற்பட்டோர்

சென்னையில் 10 மருத்துவமனைகளில் சானிட்டரி நாப்கின் டிஸ்பன்சர்களையும் இவர் நிறுவியுள்ளார். தனது ஆக்சிஜன் ஆட்டோ மூலம் இலவச சேவையை துவக்கிய இவர் இதுவரை 800க்கும் மேற்பட்ட கோவிட் நோயாளிகளின் உயிரை காப்பாற்றி சாதனை படைத்துள்ளார். தற்போது ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய மேலும் இரண்டு ஆட்டோக்களை தன் சேவையில் இணைத்து கொண்டார். தன் தாயினை இழந்த பின்பும் சமூக சேவையில் ஈடுபட்டுள்ள சீதாதேவியினை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X