சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கமுதி பெண்ணிடம் 20 பவுன் நகை பறிப்பு : 5 மாதத்துக்கு பின் வழக்கு அருப்புக்கோட்டைக்கு மாற்றம்

Added : ஆக 29, 2021
Share
Advertisement
அருப்புக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டம் நீராவி கூலிபட்டியை சேர்ந்த கோவிந்தராஜ் 70, மனைவி செல்லத்தாய் 65,பஸ்சில் பயணித்த போது 20 பவுன் நகை திருடப்பட்ட நிலையில், கமுதி போலீசார் விசாரித்து வந்த இவ்வழக்கு, ஐந்து மாதத்துக்கு பின் அருப்புக்கோட்டை ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டுள்ளது.கமுதி அருகே நீராவி கூலிபட்டியை சேர்ந்த கோவிந்தராஜ் , மனைவி செல்லத்தாய் இருவரும் 5 மாதங்களுக்கு


அருப்புக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டம் நீராவி கூலிபட்டியை சேர்ந்த கோவிந்தராஜ் 70, மனைவி செல்லத்தாய் 65,பஸ்சில் பயணித்த போது 20 பவுன் நகை திருடப்பட்ட நிலையில், கமுதி போலீசார் விசாரித்து வந்த இவ்வழக்கு, ஐந்து மாதத்துக்கு பின் அருப்புக்கோட்டை ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டுள்ளது.கமுதி அருகே நீராவி கூலிபட்டியை சேர்ந்த கோவிந்தராஜ் , மனைவி செல்லத்தாய் இருவரும் 5 மாதங்களுக்கு முன்பு திருச்சி உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றுள்ளனர். திருமண நிகழ்ச்சி முடிந்த பின் 20 பவுன் தங்க நகைகளை பேக்கில் வைத்தப்படி மதுரை வந்தனர்.இதன்பின் அருப்புக்கோட்டைக்கு தனியார் பஸ்சில் சென்ற போது காரியாபட்டியில் ஏறிய பயணிகளில் 30 , 35 வயது பெண்கள் இருவர் செல்லத்தாய் அருகில் உட்கார்ந்து கொண்டனர். இதில் ஒரு பெண் உடல்நிலை சரியில்லாதது போல் நடித்தப்படி செல்லத்தாயின் மீது அடிக்கடி சாய்ந்து கொண்டே வந்துள்ளார்.அருப்புக்கோட்டை வந்தவுடன் அருகில் இருந்த பெண்கள், 'நீங்கள் இறங்குங்கள், பேக்கை எடுத்து தருகிறோம்' என கூறியப்படி அவர் இறங்கியதும் பேக்கை எடுத்து கொடுத்துள்ளனர். வீட்டிற்கு சென்று பார்த்த போது பேக்கில் இருந்த நகை மாயமானது.கமுதி போலீசில் புகார் கொடுத்தும் மாதங்கள் கடந்தும் வழக்கில் முன்னேற்றம் இல்லை. உயர் அதிகாரியிடம் புகார் கூற,அவரது உத்தரவுப்படி இவ்வழக்கு ஐந்து மாதத்துக்கு பின் அருப்புக்கோட்டை போலீசுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.----

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X