பொது செய்தி

தமிழ்நாடு

அடுக்கடுக்கான கேள்வி... திறப்புக்கு தயாராகும் பள்ளிகள்

Added : ஆக 29, 2021
Share
Advertisement
பள்ளிகள் திறப்புக்கு தயாராகி வரும்நிலையில், அனைத்து ஏற்பாடுகளும் சரிவர பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க புதிய, குழு மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் அமைக்கப்பட்டுள்ளது.அனைத்து பள்ளிகளுக்கும் நேரடி 'விசிட்' செய்து, ஆய்வறிக்கையை தயார் செய்து வருகின்றனர். இதில் கேட்கப்படும் கேள்விகள்:உள்ளாட்சி துறை பணியாளர்கள் மூலம் பள்ளி வளாகம் முழுவதும் புதர்கள்

பள்ளிகள் திறப்புக்கு தயாராகி வரும்நிலையில், அனைத்து ஏற்பாடுகளும் சரிவர பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க புதிய, குழு மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் அமைக்கப்பட்டுள்ளது.அனைத்து பள்ளிகளுக்கும் நேரடி 'விசிட்' செய்து, ஆய்வறிக்கையை தயார் செய்து வருகின்றனர். இதில் கேட்கப்படும் கேள்விகள்:உள்ளாட்சி துறை பணியாளர்கள் மூலம் பள்ளி வளாகம் முழுவதும் புதர்கள் அகற்றப்பட்டு துாய்மை செய்யப்பட்டுள்ளதா, மாணவர் பயன்படுத்தும் குடிநீர் தொட்டி துாய்மை செய்யப்பட்டுள்ளதா, கழிவறைகள் துாய்மையாக உள்ளதா, கைகழுவ போதிய தண்ணீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதா, வகுப்பறைகள், ஆய்வகம், நுாலகம் அனைத்தும் துாய்மையாக உள்ளதா, கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளதா?தெர்மல் ஸ்கேனர்இயங்குமா?போதுமான அளவு சானிடைசர், சோப்பு, முக கவசம் இருப்பில் உள்ளதா, தெர்மல் ஸ்கேனர் புதிய பேட்டரியுடன் இயங்கும் நிலையில் உள்ளதா, சுகாதாரத்துறை மூலம் வழங்கப்படும் சத்து மாத்திரை பெறப்பட்டுள்ளதா, பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்களில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், போடாதவர் விவரம்.50 சதவீத மாணவர்கள் வரவழைக்க திட்டமிட்டு ஆசிரியர்களுக்கு கால அட்டவணை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறதா, பாடப்புத்தகங்கள் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதா, வகுப்பறையில் கரும்பலகைகள் வண்ணம் பூசப்பட்டு கற்பித்தல் பணி மேற்கொள்ளும் வகையில் உள்ளதா என அடுக்கடுக்கான கேள்விகள் கேட்கப்படுகின்றன.அவசர அழைப்புகளை தொடர்பு கொள்ள மொபைல் எண்களுடன் தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளதா போன்றவை ஆய்வு செய்யப்படுகின்றன. இதற்கேற்ப அனைத்து பள்ளிகளும் தயார்நிலையில் இருக்க வேண்டுமென, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X