பொது செய்தி

தமிழ்நாடு

'ரிவென்ச் ஷாப்பிங்' திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி

Added : ஆக 29, 2021
Share
Advertisement
பிரதான சந்தைதிருப்பூர் நிறுவனங்களுக்கு, அமெரிக்கா பிரதான சந்தையாக உள்ளது. அந்நாட்டு வர்த்தகர்கள், ஆண்டுதோறும் அதிகளவு ஆர்டர்களை திருப்பூருக்கு வழங்குகின்றனர்.கடந்த 2020ல், கொரோனா பல்வேறு நாடுகளில் பரவியது. தொற்று தடுப்பு நடவடிக்கையாக, ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அமெரிக்காவில், வர்த்தக மையங்கள் மூடப்பட்டன; மக்கள் வெளியே செல்ல முடியவில்லை. இதனால், ஆடை

பிரதான சந்தைதிருப்பூர் நிறுவனங்களுக்கு, அமெரிக்கா பிரதான சந்தையாக உள்ளது. அந்நாட்டு வர்த்தகர்கள், ஆண்டுதோறும் அதிகளவு ஆர்டர்களை திருப்பூருக்கு வழங்குகின்றனர்.கடந்த 2020ல், கொரோனா பல்வேறு நாடுகளில் பரவியது. தொற்று தடுப்பு நடவடிக்கையாக, ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அமெரிக்காவில், வர்த்தக மையங்கள் மூடப்பட்டன; மக்கள் வெளியே செல்ல முடியவில்லை. இதனால், ஆடை வர்த்தகம் முழுமையாக முடங்கியது.கொரோனா கட்டுக்குள் வந்துள்ளதால், அமெரிக்காவில் வர்த்தக மையங்கள் முழு இயக்கத்துக்கு திரும்பியுள்ளன. ஆயத்த ஆடை ரகங்கள் வாங்க மக்கள் மிகுந்த ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர். அதனால், அந்நாட்டின் ஆடை தேவை அதிகரித்துள்ளது.உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும்வகையில், அமெரிக்க வர்த்தகர்கள், இந்தியா உட்பட பல்வேறு நாட்டு நிறுவனங்களுக்கு ஆர்டர்களை அதிகளவு வழங்கி வருகின்றனர். இதேபோல், வேறு மேற்கத்திய நாடுகளின் ஆர்டர்களும் அதிகளவு வருவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.பின்னலாடை துறை ஆலோசகர் சபரிகிரீஷ் கூறியதாவது:தொற்றால், அமெரிக்க மக்கள், வீடுகளில் முடங்கினர்; பொருட்களை வாங்க முடியாமல் தவித்தனர். அதற்கெல்லாம் 'பழிவாங்குவது' போல், தற்போது, 'ரிவென்ச் ஷாப்பிங்' என்கிற பெயரில், அந்நாட்டு மக்கள், அதிகளவில் பொருட்களை வாங்கி குவிக்க துவங்கி விட்டனர்.இப்பட்டியலில், ஆயத்த ஆடைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஒவ்வொருவரும் வழக்கத்தைவிட அபரிமிதமான எண்ணிக்கையில், ஆடை ரகங்களை வாங்குகின்றனர். அதனால், அமெரிக்க வணிக மையங்களில், வாடிக்கையாளர் வருகை அதிகரித்து காணப்படுகிறது; அந்நாட்டின் ஆயத்த ஆடை வர்த்தகம் சூடுபிடித்துள்ளது.இதனால், வர்த்தக நிறுவனங்கள், அனைத்து வகை ஆடைகளை அதிகளவு கொள்முதல் செய்து, இருப்பு வைக்க துவங்கிவிட்டன. இதன் எதிரொலியாக, அமெரிக்க வர்த்தகர்களிடமிருந்து, திருப்பூர் உட்பட இந்திய ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ஆர்டர் வருகையும் அதிகரித்துள்ளது.திருப்பூர் நிறுவனங்கள், பருத்தியை போன்று செயற்கை இழை ஆடை உற்பத்தியிலும் கூடுதல் கவனம் செலுத்தினால், இத்தகைய வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்தி கொள்ளமுடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.திருப்பூர் நிறுவனங்கள், பருத்தியை போன்று செயற்கை இழை ஆடை உற்பத்தியிலும் கூடுதல் கவனம் செலுத்தினால், இத்தகைய வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்தி கொள்ளமுடியும்.அமெரிக்க வணிக மையங்களில், வாடிக்கையாளர் வருகை அதிகரித்து காணப்படுகிறது; அந்நாட்டின் ஆயத்த ஆடை வர்த்தகம் சூடுபிடித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X