தமிழ்நாடு

ஒரே பணியிடத்திற்கு இரு அதிகாரிகள்: மகளிர் திட்ட அலுவலகத்தில் குழப்பம்

Added : ஆக 29, 2021
Share
Advertisement
மதுரை, மதுரை தமிழ்நாடு ஊரக வளர்ச்சி முகமை மகளிர் திட்ட கூடுதல் இயக்குனராக பிரபாகரன் உயர்நீதிமன்ற உத்தரவை காட்டி பொறுப்புகளை ஒப்படைக்காத நிலையில் அவருக்கு பதிலாக நியமிக்கப்பட்ட காளிதாஸ் பொறுப்பு ஏற்க சென்றதால் ஊழியர்கள் குழப்பமடைந்தனர்.அடுத்தாண்டு பணி ஓய்வு பெறும் நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக பிரபாகரன் மாறுதல் பெற்று கடந்தாண்டு மதுரையில் இப்பொறுப்பை

மதுரை, மதுரை தமிழ்நாடு ஊரக வளர்ச்சி முகமை மகளிர் திட்ட கூடுதல் இயக்குனராக பிரபாகரன் உயர்நீதிமன்ற உத்தரவை காட்டி பொறுப்புகளை ஒப்படைக்காத நிலையில் அவருக்கு பதிலாக நியமிக்கப்பட்ட காளிதாஸ் பொறுப்பு ஏற்க சென்றதால் ஊழியர்கள் குழப்பமடைந்தனர்.அடுத்தாண்டு பணி ஓய்வு பெறும் நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக பிரபாகரன் மாறுதல் பெற்று கடந்தாண்டு மதுரையில் இப்பொறுப்பை ஏற்றார். இந்நிலையில் அவரை பட்டுக்கோட்டை ஊரக வளர்ச்சி முகமை மண்டல பயிற்சி நிலைய முதல்வராக பணிமாறுதல் செய்து அவருக்கு பதிலாக அங்கு முதல்வராக இருந்த காளிதாைஸ மாற்றி ஆக., 18 ல் ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் கோபால் உத்தரவிட்டார்.மருத்துவ சிகிச்சை பெறுவதால் பணிமாறுதல்உத்தரவை எதிர்த்து பிரபாகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன்தற்போதைய நிலை தொடர ஆக.,27ல் உத்தரவிட்டு, விசாரணையை ஆக.,31க்கு தள்ளிவைத்தார்.இதனால் பிரபாகரன் நேற்று வழக்கம் போல மகளிர் திட்ட அலுவலகத்திற்கு பணிக்கு வந்தார். காளிதாஸூம் பொறுப்பு ஏற்க வந்தார். ஒரே பணியிடத்திற்கு இரு அதிகாரிகள் வந்தது ஊழியர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது.பிரபாகரன் கூறுகையில், ''உயர்நீதிமன்றம் உத்தரவு இருப்பதால் பணியில் தொடர்கிறேன். உயர்நீதிமன்றம் உத்தரவின்படி செயல்படுவேன்,'' என்றார்.காளிதாஸ் கூறுகையில், ''கலெக்டர் அனீஷ்சேகர் உத்தரவின்படி நேற்று முன் தினமே பொறுப்பு ஏற்றுக் கொண்டேன்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X