விதிமீறும் வாகனங்களால் விபத்து அபாயம்| Dinamalar

விதிமீறும் வாகனங்களால் விபத்து அபாயம்

Added : ஆக 29, 2021
Share
ஆண்டிபட்டி, : ஆண்டிபட்டி - தெப்பம்பட்டி ரோடு சந்திப்பில் வாகனங்களை ஒழுங்குபடுத்த தற்காலிக டிவைடர் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் விதிமீறி வாகனங்கள் செல்வதால் விபத்து அபாயம் உள்ளது.கொச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆண்டிபட்டியில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ஆண்டிபட்டி - தெப்பம்பட்டி ரோடுசந்திப்பை கடந்து தினமும் 30க்கும் மேற்பட்ட

ஆண்டிபட்டி, : ஆண்டிபட்டி - தெப்பம்பட்டி ரோடு சந்திப்பில் வாகனங்களை ஒழுங்குபடுத்த தற்காலிக டிவைடர் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் விதிமீறி வாகனங்கள் செல்வதால் விபத்து அபாயம் உள்ளது.

கொச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆண்டிபட்டியில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ஆண்டிபட்டி - தெப்பம்பட்டி ரோடுசந்திப்பை கடந்து தினமும் 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வாகனங்கள் செல்கிறது. இதனால்எந்நேரமும் இப்பகுதியில் நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசார் இங்கு தற்காலிக டிவைடர் வைத்துள்ளனர்.

வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக செல்லாமல் எதிர்திசையில் விதியை மீறி செல்கின்றன.

வளைவான இடத்தில் ஆட்டோக்களை நீண்ட நேரம் நிறுத்தி ஆட்களை ஏற்றி இறக்கி செல்கின்றனர். இதனால் விபத்து அபாயம் தொடர்கிறது. விதி மீறும் வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதிக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X