வரி கட்டாத நடிகைக்கு ரூ.338 கோடி அபராதம்

Added : ஆக 29, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பீஜிங்-சீனாவில் வரி ஏய்ப்பு செய்த பிரபல நடிகைக்கு, 338 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.நம் அண்டை நாடான சீனாவில், திரைத்துறை மற்றும் சின்னத்திரையில் நடிகையாக வலம் வரும் ஜெங் ஷூவாங், 30. இவர் 2019 மற்றும் 2020ம் ஆண்டுகளில் 'டிவி' தொடரில் நடித்து வந்தார். அந்த தொடருக் காக ஒப்பந்தம் செய்திருந்த ஷூவாங், அதை வைத்து இரண்டு ஆவணங்களையும் தயார் செய்துள்ளார்.அதில் ஒரு
 வரி கட்டாத நடிகைக்கு ரூ.338 கோடி அபராதம்

பீஜிங்-சீனாவில் வரி ஏய்ப்பு செய்த பிரபல நடிகைக்கு, 338 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நம் அண்டை நாடான சீனாவில், திரைத்துறை மற்றும் சின்னத்திரையில் நடிகையாக வலம் வரும் ஜெங் ஷூவாங், 30. இவர் 2019 மற்றும் 2020ம் ஆண்டுகளில் 'டிவி' தொடரில் நடித்து வந்தார். அந்த தொடருக் காக ஒப்பந்தம் செய்திருந்த ஷூவாங், அதை வைத்து இரண்டு ஆவணங்களையும் தயார் செய்துள்ளார்.அதில் ஒரு ஆவணத்தில், தனக்கு குறைந்த வருமானம் கிடைப்பது போல் குறிப்பிட்டிருந்தார்.

அதில் உண்மையான ஆவணத்தை தன்னிடம் வைத்து, குறைந்த வருமானம் கிடைப்பது போல் குறிப்பிட்டிருந்த ஆவணத்தை மட்டும் வருமான வரித் துறையிடம் சமர்ப்பித்திருந்தார்.அதன் வாயிலாக குறைந்த வரியை அவர் செலுத்தி வந்தது சமீபத்தில் அம்பலமானது.இந்நிலையில், வரி ஏய்ப்பு செய்த நடிகை ஷூவாங்கிற்கு, 338 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.இதற்கான உத்தரவை ஷாங்காய் நகராட்சி வரி சேவை மையம் நேற்று பிறப்பித்தது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழன் - Madurai,இந்தியா
29-ஆக-202115:46:29 IST Report Abuse
தமிழன் சீனாவும் வடகொரியாவும் இருண்ட நாடுகள். உள்ளே என்ன நடக்கிறதென்பது அந்நாட்டு மக்களுக்கே தெரியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X