மதிப்புக்கூட்டிய பொருள் தயாரிப்பு ஆலை... அமைக்கப்படுமா| Dinamalar

மதிப்புக்கூட்டிய பொருள் தயாரிப்பு ஆலை... அமைக்கப்படுமா

Added : ஆக 29, 2021
Share
கம்பம், :வாழைப்பழத்திலிருந்து மதிப்புக்கூட்டிய உணவு பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை கம்பம் பள்ளத்தாக்கில் அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என வாழை சாகுபடியாளர்கள் எதிர்பார்த்து கோரிக்கை விடுத்துள்ளனர்.தேனி மாவட்டத்தில் வாழை சாகுபடி 4 ஆயிரம் எக்டேரில் மேற்கொள்ளப்படுகிறது. செவ்வாழை, நேந்திரன், நாழிப்பூவன், ஜி 9 என பல ரகங்கள் சாகுபடியாகிறது. விலை நிலையாக

கம்பம், :வாழைப்பழத்திலிருந்து மதிப்புக்கூட்டிய உணவு பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை கம்பம் பள்ளத்தாக்கில் அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என வாழை சாகுபடியாளர்கள் எதிர்பார்த்து கோரிக்கை விடுத்துள்ளனர்.தேனி மாவட்டத்தில் வாழை சாகுபடி 4 ஆயிரம் எக்டேரில் மேற்கொள்ளப்படுகிறது. செவ்வாழை, நேந்திரன், நாழிப்பூவன், ஜி 9 என பல ரகங்கள் சாகுபடியாகிறது. விலை நிலையாக இல்லாமல் குறைவதும், அதிகரிப்பதும் மாறிமாறி நடக்கும். ஆனால் உற்பத்தி செலவுகள் குறையாது. மாறாக உரம், பூச்சி மருந்துகள், தொழிலாளர் கூலி உயர்ந்து கொண்டே போகிறது. இயற்கை சீற்றங்களில் வாழை சேதம் ஏற்படுவது தொடர்கிறது.இந்நிலையில் வாழைப்பழத்தை பயன்படுத்தி மதிப்புக்கூட்டிய உணவுப்பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை கம்பம் பள்ளத்தாக்கில் அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என சாகுபடியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அவர்கள் கூறுகையில், ‛சர்வதேச அளவில் 97.5 லட்சம் மில்லியன் டன் வாழை ஆண்டு தோறும் உற்பத்தியாகிறது. இதில் இந்தியாவில் மட்டும் 16.91 லட்சம் மில்லியன் டன் உற்பத்தியாகிறது. ஏறக்குறைய 90 சதவீதம் உள்நாட்டு தேவைக்கு பயன்படுகிறது. 10 சதவீதம் மட்டுமே ஏற்றுமதியாகிறது. விலை கிடைக்காத சமயங்களில் விவசாயிகள் நிலைமை மிக மோசமாக உள்ளது. எனவே ஆண்டுதோறும் கட்டுபடியான விலை கிடைக்க வாழைப்பழத்தில் இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட உணவு பொருள்கள் குறிப்பாக ஜாம், ஜெல்லி, பவுடர், பானம் தயாரிக்கும் தொழிற்சாலையை கம்பம் பள்ளத்தாக்கில் தமிழக அரசு அமைக்க வேண்டும், என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X