சில வரி செய்திகள்...

Added : ஆக 29, 2021
Share
Advertisement
பாக்., உளவாளி விடுவிப்புகுவாலியர்: மத்திய பிரதேசத்தின் குவாலியரில் 2006ம் ஆண்டு பாகிஸ்தான் உளவாளி அப்பாஸ் அலி, 43, போலீசில் சிக்கினார். வழக்கில் 14 ஆண்டு தண்டனை பெற்று குவாலியர் சிறையில் இருந்த அவர், கடந்த ஆண்டு விடுதலை ஆனார். கொரோனா பரவலால் அப்பாஸ் அலியை அவரது நாட்டிற்கு அனுப்பவில்லை.இந்நிலையில் சிறையில் இருந்து அவரை அழைத்துச் சென்ற போலீசார், பஞ்சாபின் வாகா எல்லையில்

பாக்., உளவாளி விடுவிப்பு

குவாலியர்: மத்திய பிரதேசத்தின் குவாலியரில் 2006ம் ஆண்டு பாகிஸ்தான் உளவாளி அப்பாஸ் அலி, 43, போலீசில் சிக்கினார். வழக்கில் 14 ஆண்டு தண்டனை பெற்று குவாலியர் சிறையில் இருந்த அவர், கடந்த ஆண்டு விடுதலை ஆனார். கொரோனா பரவலால் அப்பாஸ் அலியை அவரது நாட்டிற்கு அனுப்பவில்லை.இந்நிலையில் சிறையில் இருந்து அவரை அழைத்துச் சென்ற போலீசார், பஞ்சாபின் வாகா எல்லையில் பாதுகாப்பு படையினரிடம் நேற்று ஒப்படைத்தனர். அவர்கள் பாக்., வீரர்களிடம் அப்பாஸ் அலியை ஒப்படைப்பர் என போலீசார் கூறினர்.

குழந்தை தொழிலாளர் மீட்பு

சுல்தான்பூர்: உத்தர பிரதேசத்தின் சுல்தான்பூர் மாவட்டத்தில் குரேபார், ஜெய்சிங்பூர் உட்பட பல்வேறு இடங்களில், அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர். இதில் 46 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். அவர்களை பணியமர்த்திய நிறுவனங்கள் மீது, தொழிலாளர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரூ.363 கோடி சொத்து பறிமுதல்

புதுடில்லி: தெலுங்கானாவின் ஐதராபாதில் எம்.எம்.டி.சி., எனப்படும் உலோகங்கள் மற்றும் கனிமங்கள் வர்த்தக பொதுத் துறை நிறுவனம் செயல்படுகிறது. இங்கு பணியாற்றும் அதிகாரிகளுடன் இணைந்து முறைகேடாக தங்கம் கொள்முதல் செய்ததன் வாயிலாக, 780 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக சுகேஷ் குப்தா, அவரது குடும்பத்தினர் மற்றும் நிறுவனங்கள் மீது அமலாக்கத்துறையினர் மோசடி வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவர்களுக்கு சொந்தமாக ஐதராபாதில் உள்ள நகை நிறுவனங்களின் 363 கோடி ரூபாய்க்கும் மேலான சொத்துகளை, அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர்.

பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் ராய்ப்பூர் மாவட்டம் சட்னமிபாராவை சேர்ந்தவர் கங்கா பஞ்ஜாரே, 33. இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன், அதே கிராமத்தை சேர்ந்த இரண்டரை வயது நம்ரதா நிரலா, அவரது சகோதரி நகிதா, 4, ஆகியோரை தன் வீட்டிற்கு கடத்தி வந்துள்ளார். பின் நம்ரதாவை கழுத்தை நெரித்து கொன்று புதைத்துள்ளார். நகிதாவை மீட்ட போலீசார், கங்கா பஞ்ஜாரேவை கைது செய்தனர். இவர் மீதான கொலை வழக்கை விசாரித்த ராய்ப்பூர் மாவட்ட நீதிமன்றம், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

adv id
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X