பொது செய்தி

தமிழ்நாடு

நிலக்கரியின் தரம் மத்திய நிறுவனம் ஆய்வு

Added : ஆக 29, 2021
Share
Advertisement
சென்னை-துாத்துக்குடி, திருவள்ளூர், சேலம் மாவட்டங்களில் மின் வாரியத்துக்கு, 4,320 மெகா வாட் திறனில், ஐந்து அனல் மின் நிலையங்கள் உள்ளன. அவற்றில் முழு மின் உற்பத்திக்கு தினமும், 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை.ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில் உள்ள, 'கோல் இந்தியா' சுரங்கங்களில் இருந்து எடுக்கப்பட்டு, தினமும் கப்பல்களில் வரும் நிலக்கரி, சென்னை - எண்ணுார் மற்றும் துாத்துக்குடி

சென்னை-துாத்துக்குடி, திருவள்ளூர், சேலம் மாவட்டங்களில் மின் வாரியத்துக்கு, 4,320 மெகா வாட் திறனில், ஐந்து அனல் மின் நிலையங்கள் உள்ளன.

அவற்றில் முழு மின் உற்பத்திக்கு தினமும், 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை.ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில் உள்ள, 'கோல் இந்தியா' சுரங்கங்களில் இருந்து எடுக்கப்பட்டு, தினமும் கப்பல்களில் வரும் நிலக்கரி, சென்னை - எண்ணுார் மற்றும் துாத்துக்குடி துறைமுகங்களில் இறக்கப்படுகிறது. அங்கிருந்து, மின் நிலையங்களுக்கு நிலக்கரி அனுப்பப்படுகிறது.நிலக்கரியின் தரம் குறைவாக இருந்தால், மின் உற்பத்திக்கு அதிக அளவில் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இதனால், அதிக செலவு ஏற்படுகிறது; சுற்றுச்சூழலும் மாசடைகிறது.இந்நிலையில், நிலக்கரியின் தரம், அதை எரியூட்டும், 'பாய்லர்' செயல்பாடு, நிலக்கரியை எரிப்பதில் இருந்து வரும் வெப்பம் உள்ளிட்டவை தொடர்பாக, சி.ஐ.எம்.எப்.ஆர்., எனப்படும் மத்திய சுரங்க மற்றும் எரிபொருள் ஆய்வு நிறுவனம் வாயிலாக, துல்லியமாக ஆய்வு செய்ய, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.அதன் அடிப்படையில், பாய்லர் தரத்தை மேம்படுத்துவது, தரமான நிலக்கரியை பெறுவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X