பொது செய்தி

தமிழ்நாடு

வியட்நாம் தூதரகத்திற்கு ராஜராஜன் சிலை பரிசு

Added : ஆக 29, 2021
Share
Advertisement
சென்னை--தமிழக தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பில், வியட்நாம் துாதரகத்துக்கு, ராஜராஜன் சிலை பரிசாக வழங்கப்பட்டது.தமிழகத்துக்கும், வியட்நாம் நாட்டிற்கும் இடையிலான, வர்த்தக உறவை மேம்படுத்தும் வகையில், தமிழக தொழில் வர்த்தக சங்கத்தினரை, அந்நாட்டின் துாதர் பாம் சான் சாவ் சந்தித்தார். பின், பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. அப்போது, தமிழக தொழில் வர்த்தக

சென்னை--தமிழக தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பில், வியட்நாம் துாதரகத்துக்கு, ராஜராஜன் சிலை பரிசாக வழங்கப்பட்டது.

தமிழகத்துக்கும், வியட்நாம் நாட்டிற்கும் இடையிலான, வர்த்தக உறவை மேம்படுத்தும் வகையில், தமிழக தொழில் வர்த்தக சங்கத்தினரை, அந்நாட்டின் துாதர் பாம் சான் சாவ் சந்தித்தார். பின், பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. அப்போது, தமிழக தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் சோழநாச்சியார் ராஜசேகர், வியட்நாம் துாதருக்கு, அரையடி உயர ராஜராஜ சோழனின் செப்புச்சிலையை பரிசாக வழங்கினார். அதைப் பெற்ற துாதர் நெகிழ்ந்தார்.

இதுகுறித்து, சோழநாச்சியார் ராஜசேகர் கூறியதாவது:உலகின் வல்லரசான அமெரிக்கா, வியட்நாமை இரண்டாகப் பிரித்து அடிமைப்படுத்தியது. இதற்கு எதிராக, ஹோசிமின் தலைமையிலான படைகள், 20 ஆண்டுகளுக்கும் மேல் போரிட்டு வென்றன; உலகமே வியந்தது. அப்போது, நிருபர் ஒருவர், 'வல்லரசை வெல்லும் வல்லமை பெற்றது எப்படி' என கேட்டார். அதற்கு, ஹோசிமின், 'உலகின் பல நாடுகளை வெற்றி கொண்ட, ஆசிய மன்னர் ராஜராஜ சோழனின் வெற்றிக் கதைகளை படித்திருந்தேன்.

அது தான் எனக்கு நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளித்தது' என்றார். வியட்நாம் விடுதலைக்கு காரணமான ராஜராஜன் சிலையை, அந்நாட்டு துாதருக்கு வழங்கினேன். அவர் நெகிழ்ந்ததுடன், ஹோசிமின், இந்திய தலைவர்களுக்கு எழுதிய கடிதங்கள்; இந்தியாவை பற்றி எழுதிய கட்டுரைகள் உள்ளிட்டவை அடங்கிய நுாலை, எனக்குப் பரிசாக அளித்தார். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X