பொது செய்தி

தமிழ்நாடு

தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 786 பேருக்கு வேலை

Added : ஆக 29, 2021
Share
Advertisement
உத்திரமேரூர் : உத்திரமேரூரில் நேற்று நடந்த, திறன் ஆள் சேர்ப்பு மற்றும் தனியார் வேலை வாய்ப்பு முகாமில், 786 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், திறன் ஆள் சேர்ப்பு மற்றும் தனியார் வேலை வாய்ப்பு வழங்கும் முகாம், உத்திரமேரூர் அரசு மகளிர்
தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 786 பேருக்கு வேலை

உத்திரமேரூர் : உத்திரமேரூரில் நேற்று நடந்த, திறன் ஆள் சேர்ப்பு மற்றும் தனியார் வேலை வாய்ப்பு முகாமில், 786 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், திறன் ஆள் சேர்ப்பு மற்றும் தனியார் வேலை வாய்ப்பு வழங்கும் முகாம், உத்திரமேரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.

தமிழ்நாடு மாநில ஊரகவாழ்வாதார இயக்கம் மகளிர் திட்ட துணை இயக்குனர் சீனிவாசராவ், மாவட்ட வேலை வாய்ப்பு துணை இயக்குனர் அருணகிரி ஆகியோர், துவக்கி வைத்தனர்.இதில், 18 திறன் பயிற்சி நிறுவனங்கள், 42 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. எட்டாம் வகுப்பு முதல், பட்டப்படிப்பு வரைபடித்த, 3,500க்கும் மேற்பட்டோரில், 786 பேர்தேர்வு செய்யப்பட்டனர். 52 பேருக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. 251 பேர், திறன் பயிற்சிக்காக தேர்வு செய்யப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X