நெல்லில் இலைக்கருகல் நோய் கட்டுப்படுத்த ஆலோசனை

Added : ஆக 29, 2021
Share
Advertisement
கம்பம் :கம்பம் மற்றும் சின்னமனுார் வட்டாரங்களில் முதல் போக நெல் சாகுபடியில் தற்போது பரவலாக இலைக்கருகல் நோய் தாக்குதல் தெரிகிறது. இதை கட்டுப்படுத்த சின்னமனுார் வேளாண் உதவி இயக்குனர் பாண்டி வழங்கியுள்ள ஆலோசனை:நெல் பயிர்கள் கதிர்விடும் நிலையில் உள்ளது. ஆங்காங்கே இலைக்கருகல் காணப்படுகிறது. கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு 30 கிராம் அக்ரிமைசின், 200 கிராம் பைடோலான்

கம்பம் :கம்பம் மற்றும் சின்னமனுார் வட்டாரங்களில் முதல் போக நெல் சாகுபடியில் தற்போது பரவலாக இலைக்கருகல் நோய் தாக்குதல் தெரிகிறது. இதை கட்டுப்படுத்த சின்னமனுார் வேளாண் உதவி இயக்குனர் பாண்டி வழங்கியுள்ள ஆலோசனை:நெல் பயிர்கள் கதிர்விடும் நிலையில் உள்ளது. ஆங்காங்கே இலைக்கருகல் காணப்படுகிறது. கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு 30 கிராம் அக்ரிமைசின், 200 கிராம் பைடோலான் ஆகியவற்றை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். நெல்லில் இலைச்சுருட்டுப்புழு, தத்துப்பூச்சி, இலைப்பேன் போன்றவை தாக்கலாம். இவற்றை கட்டுப்படுத்த வயல்களில் செடிகொடிகளை அகற்றி சுத்தமாக பராமரிக்க வேண்டும்.மாலை நேரங்களில் விளக்குப்பொறி மற்றும் இனக்கவர்ச்சி பொறிகளை பயன்படுத்தி தாய் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். இலைச்சுருட்டு புழுக்களை கட்டுப்படுத்த தேவையான அளவு தழைச்சத்துக்கள் இட வேண்டும். ஒரே சமயத்திலும் பயன்படுத்த கூடாது. அசாடி டிராக்டின் எக்டேருக்கு ஆயிரம் மில்லி அல்லது வேப்பங்கொட்டை சாறு 5 சதம் பயன்படுத்தலாம். பூச்சிகளின் தாக்குதலை கண்காணித்து பொருளாதார சேதம் ஏற்படும் பட்சத்தில் ரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தலாம். ஒரு முறை பயன்படுத்திய பூச்சிக்கொல்லியை மீண்டும் பயன்படுத்த கூடாது. இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X