அரசியல் செய்தி

தமிழ்நாடு

'நதியில் வெள்ளம்; கரையில் நெருப்பு' பன்னீர்செல்வம் பேச்சால் சிரிப்பலை

Added : ஆக 29, 2021
Share
Advertisement
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற, மத்திய அரசை வலியுறுத்தி, முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க., வெளிநடப்பு செய்தது. அப்போது, சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பன்னீர்செல்வம் குறித்து, சபை முன்னவரும், அமைச்சருமான துரைமுருகன் ஒரு கருத்து கூறினார். மீண்டும், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், சபை உள்ளே வந்ததும், அமைச்சர் துரைமுருகன் எழுந்து,

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற, மத்திய அரசை வலியுறுத்தி, முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க., வெளிநடப்பு செய்தது.

அப்போது, சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பன்னீர்செல்வம் குறித்து, சபை முன்னவரும், அமைச்சருமான துரைமுருகன் ஒரு கருத்து கூறினார். மீண்டும், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், சபை உள்ளே வந்ததும், அமைச்சர் துரைமுருகன் எழுந்து, ''எதிர்க்கட்சி துணை தலைவர் தொடர்பாக நான் பேசியது, அவரது மனதை புண்படுத்துமானால், அதை சபைக்குறிப்பில் இருந்து நீக்கவும்,'' என்றார்.அதை ஏற்று, அவர் பேசியதை நீக்குவதாக, சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

அதற்கு நன்றி தெரிவித்து, பன்னீர்செல்வம் பேசுகையில், ''சபை முன்னவர் மீது, எனக்கு தனிப்பட்ட மரியாதை உண்டு. அவராக அவர் கூறியதை நீக்கும்படி கூறியதற்கு நன்றி. என் நிலைமை, அவருக்கு நன்றாக தெரியும். ஒரு பாட்டு நினைவுக்கு வருகிறது. நதியில் பெரு வெள்ளம்; கரையினில் நெருப்பு; இடையில் இறைவனுடைய சிரிப்பு; இது தான் என் நிலை,'' என்றார். இதனால், சபையில் சிரிப்பலை எழுந்தது. தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வாய் விட்டு சிரிக்க, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அமைதி காத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X